கடந்த வாரம் இன்டஸ்இண்ட் வங்கி தனது காலாண்டு முடிவுகளை மிகவும் வலிமையான நிலையில் வெளியிட்டுள்ளது. இந்நிலையில் தற்போது தனது வர்த்தகத்தை விரிவாக்கம் செய்ய முடிவு செய்துள்ளது.
இதன்படி என்பிஎப்சி பிரிவில் புகழ்பெற்ற பாரத் பைனான்சியல் இன்க்ளூஷன் லிமிடெட் நிறுவனத்தை முழுமையாகக் கைப்பற்ற முடிவு செய்துள்ளது. இந்நிறுவனம் முன்பு எஸ்கேஎஸ் மைக்ரோபைனான்ஸ் என்ற பெயரில் இயங்கியது குறிப்பிடத்தக்கது.
பங்கு பரிமாற்றம்..
இந்நிலையில் இன்டஸ்இண்ட் வங்கி நிர்வாகம், பாரத் பைனான்சியல் நிறுவனத்தைத் தனியாக இயக்காமல் துணை நிறுவனமாக இயக்க இயக்க முடிவு செய்துள்ளது.
இதன் மூலம் பார்த் பைனான்சியல் இன்க்ளூஷன் லிமிடெட் நிறுவனத்தின் ஒவ்வொரு 1000 பங்குகளுக்கு இன்டஸ்இண்ட் நிர்வாகம் தனது 639 பங்குகளை அளிக்க முடிவு செய்துள்ளது.
துணை நிறுவனம்
துணை நிறுவனமாக இருக்கும் போது இரு நிறுவனங்களும் தத்தம் நிறுவனங்களின் வர்த்தகம், சேவை, கட்டமைப்புகளைப் பயன்படுத்திக் குறைந்த காலகட்டத்தில் பெரிய அளவில் வளர முடியும் என இன்டஸ்இண்ட் நிர்வாகம் நம்புகிறது.
இணைப்பு
இரு நிறுவனங்கள் மத்தியிலான இணைப்பு முழுமையாக முடிய 9-10 மாதங்கள் வரை ஆகலாம் எனத் தெரிகிறது.
பார்த் பைனான்சியல் இன்க்ளூஷன் லிமிடெட்
என்பிஎப்சி பிரிவில் இயங்கும் இந்நிறுவனம் சுமார் 1.408 கிளைகளைக் கொண்டு வர்த்தகம் செய்து வருகிறது. பாரத் பைனான்சியல் இன்க்ளூஷன் லிமிடெட் நிறுவனத்தில் பணியாற்றும் 15,284 ஊழியர்களும் புதிய நிர்வாகத்தின் கீழ் சேர்க்கப்படுவதால் ஊழியர்கள் தங்களது பணியை இழக்க வேண்டியதில்லை.
லாபம்..
இந்த இணைப்பின் மூலம் இன்டஸ்இண்ட் வங்கியின் வாடிக்கையாளர் எண்ணிக்கை அதிகரிப்பது மட்டும் அல்லாமல் இதுவரை தான் செல்லாத வர்த்தத சந்தைக்குத் தனது சேவையை விரிவாக்க முடியும்.
வர்த்தகம்
ஜூன் மாத முடிவில் பாரத் பைனான்சியல் இன்க்ளூஷன் லிமிடெட் நிறுவனம் 68 லட்ச வாடிக்கையாளர் உடன் 10,971 கோடி ரூபாய் அளவிலான கடன் வர்த்தகத்துடன் உள்ளது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications