ஜெர்மன் நாட்டின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான வோக்ஸ்வாகன் இந்தியாவில் 3 சதவீத வர்த்தகச் சந்தையைப் பிடிக்க வேண்டும் என்ற புதிய இலக்குடன் களமிறங்கியுள்ளது.
இந்தியாவில் ஆட்டோமொபைல் சந்தை எப்போதுமில்லாத வகையில் வளர்ந்து வருகிறது. இந்த வளர்ச்சியைக் கண்டுகொண்ட வோக்ஸ்வாகன் இந்தியாவில் 3 சதவீத ஆட்டோமொபைல் வர்த்தகத்தைப் பெற்ற வேண்டும் என்ற இலக்குடன் பல புதிய மாடல்கள் காரை அறிமுகப்படுத்தி வருகிறது.

இந்திய சந்தையில் தனது வர்த்தகத்தை வலிமைப்படுத்த வோக்ஸ்வாகன் பிராண்டு பெயரை மக்களுக்கு அறியப்படுத்தும் வகையில் பல முக்கியத் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது.
தற்போதைய வர்த்தகத்தில் இந்தியா எங்களுக்கு மிகப்பெரிய வர்த்தகச் சந்தையாக உள்ளது. இங்கு எங்கள் நிறுவன வளர்ச்சிக்குப் பல வாய்ப்புகள் உள்ள நிலையில், வோக்ஸ்வாகன் இந்தியாவில் தனக்கான ஒரு வர்த்தகத்தையும் சந்தையும், இடத்தையும் விரைவில் பிடிக்கும் என வோக்ஸ்வாகன் இந்தியாவின் விற்பனை பிரிவின் தலைவர் ஸ்டீபென் கனாப் தெரிவித்தார்.
இன்றளவில் வோக்ஸ்வாகன் இந்தியாவில் 1.5 சதவீதம் அளவிலான கார் வர்த்தகத்தை மட்டுமே பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications