இந்தியர்கள் வெளிநாட்டில் வீடு வாங்குவது அதிகரிப்பு.. என்ன காரணம்..?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்திய ரியல் எஸ்டேட் துறை மந்தமாக இருப்பதால் பெறும்பாலான் இந்தியர்கள் வெளிநாடுகளில் சொத்து வாங்கி முதலீடு செய்கின்றனர்.

 

நடப்பு நிதி ஆண்டில் மட்டும் 23.5 மில்லியன் டாலர் மதிப்பிலான சொத்துக்களை இந்தியர்கள் வெளிநாடுகளில் வாங்கியிருப்பதாக நைட் பிராங்க் அறிக்கை கூறியுள்ளது. அந்த அறிக்கையின் முழு விவரத்தினை இங்கு விளக்கமாகப் பார்க்கலாம்.

வெளிநாடுகளில் வீடு வாங்குவது என்பது ஏன் சிறந்தது?

வெளிநாடுகளில் வீடு வாங்குவது என்பது ஏன் சிறந்தது?

பிற வெளிநாடுகளுக்கு எதிராக இந்திய நாணயத்தின் மதிப்பு பலமடைந்து வரும் நிலையில் வெளிநாடுகளில் வீடு வாங்குவது இந்தியர்களுக்கு மலிவானதாக உள்ளது. எனவே இந்தியர்களால் இங்கிலாந்து, சைப்ரஸ், மலேசியா மற்றும் துபாய் உள்ளிட்ட நாடுகளில் ஒரு வருடத்திற்கு முன்பை விட இப்போது விலை குறைவாக வீடுகள் வாங்க முடிகின்றது.

யாரெல்லாம் வெளிநாடுகளில் வீடு வாங்குகின்றார்கள்?

யாரெல்லாம் வெளிநாடுகளில் வீடு வாங்குகின்றார்கள்?

இந்தியர்கள் பொதுவாக முதலீடாகவே வெளிநாடுகளிள் வீடுகளை வாங்குகின்றனர், அதுவும் இரண்டாவது வீடாகவே வாங்குகின்றனர். எனவே யாரெல்லாம் வெளிநாடுகளில் வீடு வாங்குகின்றார்கள் என்ற விவரத்தினை இங்குப் பார்க்கலாம்.

68% - வணிகர்கள் மற்றும் நிறுவனர்கள்
21% - சுய தொழில் செய்பவர்கள் / வர்த்தகர்கள்
7% - வேலை செய்பவர்கள்
1% - பிறர்
3% - சுய தொழில் செய்பவர்கள்

 

விருப்பமான சொத்து வகை
 

விருப்பமான சொத்து வகை

எந்த வகையிலான வீடுகளை இந்தியர்கள் வாங்க விரும்புகின்றார்கள்.

68% குடியிருப்புகள் மற்றும் அப்பார்ட்மெண்ட்டுகள்
20% விலாக்கள்
9% டியூப்ளக்ஸ் வீடுகள்
3% பிற வகை வீடுகள்

 

வீடுகளின் மதிப்பு எவ்வளவு?

வீடுகளின் மதிப்பு எவ்வளவு?

வீடு வாங்கும் இந்தியர்களில் 4-ல் ஒருவர் 1 மில்லியன் டாலருக்கும் அதிகமாக விலை கொடுத்து வாங்குகின்றனர்.

45% - 0.5 மில்லியன் டாலருக்கும் குறைவாக
32% - 0.5 மில்லியன் டாலருக்கும் அதிகமாகவும் 1 மில்லியன் டாலருக்கும் குறைவாகவும் செலவு செய்து வீடு வாங்குகின்றனர்.
16% - 1 மில்லியன் டாலர் முதல் 1.5 மில்லியன் டாலர் வரை செலவு செய்து வீடுகளைக் கட்டுகின்றனர்.
7% - 1.5 மில்லியன் டாலருக்கும் அதிகமாகச் செலவு செய்து வீடு வாங்குகின்றனர்.
அடுத்து எந்த நாடுகளில் எல்லாம் வீடு வாங்குகின்றார்கள் என்று விளக்கமாகப் பார்ப்போம்.

 

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியா கணக்கின் படி சீனர்களுக்கு அடுத்தபடியாக இந்தியர்கள் தான் அதிக அளவில் அங்குக் குடிபெயர்கிறார்கள்.

பரிமாற்ற விகிதம் (1 வருடத்தில்): 1.4%
சொத்து விலை (1 வருடத்தில்): 12.5%
வருவாய் (1 வருடத்தில்): 11%

 

சைப்ரஸ்

சைப்ரஸ்

ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்வதன் மூலம் சைப்ரஸ் நாட்டில் எளிதாகக் குடியுரிமை பெறலாம். அது மட்டும் இல்லாமல் சைப்ரஸ் குடியுரிமை பெற்றவர்கள் 28 ஐரோப்பிய நாடுகளிலும் வேலை செய்யலாம், படிக்கலாம் மற்றும் முதலீடும் செய்யலாம்.

பரிமாற்ற விகிதம் (1 வருடத்தில்): 1.4%
சொத்து விலை (1 வருடத்தில்): 1%
வருவாய் (1 வருடத்தில்): -0.3%

 

மலேஷியா

மலேஷியா

‘மலேஷியாவில் எனது இரண்டாம் வீடு' என்ற திட்டம் வழியாக விசா பெறும் இந்தியர்களால் 10 வருடம் வரை தங்க முடியும்.

பரிமாற்ற விகிதம் (1 வருடத்தில்): 10.7%
சொத்து விலை (1 வருடத்தில்): 3.5%
வருவாய் (1 வருடத்தில்): 7.5%

 

பிரிட்டன்

பிரிட்டன்

சிறந்த உள்கட்டமைப்பு, தரமான கல்வி, எளிதான நடவடிக்கைகள், சிறந்த ரியல் எஸ்டேட் கட்டுப்பாடுகள், மற்றும் பாதுகாப்பு ஆகியவை உள்ளதால் பல இந்தியர்கள் பிரட்டனில் சொத்துக்களை வாங்குகின்றனர்

பரிமாற்ற விகிதம் (1 வருடத்தில்): 5.5%
சொத்து விலை (1 வருடத்தில்): 2.4%
வருவாய் (1 வருடத்தில்): -3.3%

 

துபாய்

துபாய்

இந்தியாவிற்கு மிக அருகில் துபாய் உள்ளதால் இங்கு வீடு வாங்க இந்தியர்கள் அதிகமாக விரும்புகின்றனர்.

பரிமாற்ற விகிதம் (1 வருடத்தில்): 3.8%
சொத்து விலை (1 வருடத்தில்): -0.4%
ரிட்டர்ன்ஸ் (1 வருடத்தில்): -4.2%

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Why and where are Indians buying homes abroad

Why and where are Indians buying homes abroad
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X