2018 புத்தாண்டுக்கு முன்பு மக்களின் புழக்கத்திற்காக 200 ரூபாய் நோட்டுகள் ஏடிஎம்இல் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளது. கடந்த நவம்பர் மாதம் போல் இந்த வருடமும் புதிய ரூபாய் நோட்டு வெளியீட்டுக்குப் பின் ஏதேனும் அதிரடி அறிவிப்பு வருமா என்ற அச்சம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
சந்தையில் இந்தப் புதிய 200 ரூபாய் நோட்டுகளை ஆகஸ்ட் 24ஆம் தேதி வெளியிட்டது, ஆனால் இது ஏடிஎம்இல் வருவதில் சில பிரச்சனை எழுந்துள்ளது.
வங்கிகளின் விருப்பம்..
அரசு ஒவ்வொரு முறையும் ரூபாய் நோட்டுகளை மாறுபட்ட வடிவத்தில் வெளியிடும் காரணத்தால் ஏடிஎம் இயந்திரங்களை ஒவ்வொருமுறையும் மாற்றியமைக்க வேண்டிய சூழ்நிலைக்கு வங்கிகள் தள்ளப்படுகிறது.
இதனால் இப்புதிய 200 ரூபாய் நோட்டுகள் ஏடிஎம்களில் அளிக்க பெரிய அளவில் விருப்பம் காட்டவில்லை. இதுவே இந்த தாமதத்திற்கு முக்கிய காரணமாக விளங்குகிறது.
ஏடிஎம் நிறுவனங்கள்
புதிய 200 நோட்டுக்காக ஏடிஎம் இயந்திரங்களை மாற்றியமைக்க வங்கிகள் பெரியதாக விரும்பவில்லை, இதுவரை நாங்கள் சில நூறு ஏடிஎம் இயந்திரங்களை மட்டுமே மாற்றியுள்ளோம்.
மேலும் இதற்கான கோரிக்கைகளும் பெரிய அளவில் இல்லை என்று என்சிஆர் நிறுவன தலைவர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் 1 லட்சத்திற்கும் அதிகமான ஏடிஎம்கள் இந்தியாவில் இயங்கி வருகிறது குறிப்பிடத்தக்கது.
கடினமான காரியம்..
மத்திய அரசு பணமதிப்பிழப்பு அறிவிப்பு பின்பு போது மக்கள் மத்தியில் ஏடிஎம் இயந்திரத்தை புதிய நோட்டுகளுக்காக மாற்றியமைப்பது எளிதான காரியம் என்ற எண்ணம் நிலவுகிறது, ஆனால் உண்மையில் இது கடினமான ஒரு விஷயம் எனக் கனரா வங்கி தலைவர் ராகேஷ் ஷர்மா தெரிவித்துள்ளார்.
கனரா வங்கி மட்டும் இந்தியா முழுவதும் 10,000க்கும் அதிகமான ஏடிஎம்களை வைத்துள்ளது.
காலத் தாமதம்
உண்மையிலேயே ஏடிஎம் இயந்திரத்தை புதிய நோட்டுகளின் வடிவத்திற்கு ஏற்றார்போல் மாற்றியமைப்பது சற்று கடினமான வேலையாக இருக்கிறது.
இதனுடன் இந்த ஏடிஎம் இயந்திரத்தை மாற்றியமைப்பதில் வங்கிகளுக்கு கூடுதல் செலவுகளையும் பணியையும் அளிக்கும் காரணத்தால் வங்கிகள் இப்பணியை தள்ளிப்போடுகிறது.
வங்கி பரிமாற்றம்
அரசு இதனை முன்கூடியே வெளியிடு உள்ள நிலையில் மக்கள் வங்கிகளில் இதனை எவ்விதமான பிரச்சனையும் இல்லாமல் பெற்றுக்கொள்ள முடியும்.
ஆனால் தற்போது மக்கள் பெரும்பாலும் ஏடிஎம் வாயிலாகவே பணத்தைப் பெற்று வரும் காரணத்தால், ஏடிஎம்இல் புதிய 200 ரூபாய் நோட்டுக் கிடைக்கவில்லையெனில் மக்களுக்கும் பெரிதும் பயன் அளிக்கவில்லை.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?



Click it and Unblock the Notifications