நாட்டின் முன்னணி தனியார் வங்கிகளில் ஒன்றான ஆக்சிஸ் வங்கி செப்டம்பர் 30 உடன் முடிந்த காலாண்டில் வெறும் 432.38 கோடி ரூபாயை மட்டுமே லாபமாக பெற்று இருந்தது. கடந்த நிதியாண்டில் இதே காலாண்டில் இது 318.08 கோடி ரூபாயாகவும், ஜூன் காலாண்டில் 1,305.60 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
வருடாந்திர அடிப்படையில் ஒப்பிட்டால் சற்று அதிகமான லாபத்தை பெற்று இருந்தாலும், ஜூன் காலாண்டு உடன் ஒப்பிடும்போது மிகப்பெரிய வீழ்ச்சியை சந்தித்துள்ளது ஆக்சிஸ் வங்கி.

செப்டம்பர் காலாண்டில் ஆக்சிஸ் வங்கி 1,318 கோடி ரூபாய் மொத்த லாபம் பெறும் என கணிப்புகள் வெளியான நிலையில் வெறும் 432 கோடி ரூபாய் மட்டுமே லாபமாக பெற்று முதலீட்டாளர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது ஆக்சிஸ் வங்கி.
இக்காலக்கட்டத்தில் இவ்வங்கியின் வராக்கடன் 22,030.87 கோடியில் இருந்து 27,402.32 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. கடந்த நிதியாண்டின் இதே செப்டம்பர் காலாண்டில் இது 16,378.65 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications