தீபாவளி பண்டிகையின்போது தங்கத்தை போல முந்திரியின் விற்பனையும் அதிகமாக இருக்கும். ஆனால் இந்த தீபாவளிக்கு முந்திரி விற்பனை சுமார் 20 சதவீதம் வரை சரிந்துள்ளது.
இக்காலக்கட்டத்தில் முந்திரியின் மீதான அதீத விலை, இதன் மீதான ஜிஎஸ்டி வரி குழப்பங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து அதிகமாக இறக்குமதி செய்யப்பட்ட முந்திரி ஆகியவற்றின் காரணமாக முந்திரி விற்பனை 20 சதவீதம் வரை குறைந்துள்ளது.

வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டும் முழுமையான மற்றும் உடைந்த முந்திரி 300-400 ரூபாய் வரையிலான விலையில் உள்ளது, இதற்கு இறக்குமதி வரியான 45 சதவீதம் விதித்தால் கூட விற்பனையாளர்களுக்கு லாபமே.
இந்த தீபாவளிக்கு ஒரு கிலோ முந்திரி 800-820 ரூபாய் வரையில் விற்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. சந்தையில் அதிகளவில் உடைக்கப்பட்ட முந்திரிக்கு அதிக தேவை நிலவும் காரணத்தால் இதன் விலையும் வெளிநாடுகளில் குறைவாக இருக்கும் காரணத்தால் இந்த வருடம் அதிகளவில் இறக்குமதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
முந்திரி மீது ஜிஎஸ்டி வரி 12 சதவீதமாக இருக்கும் நிலையில் மக்கள் மத்தியில் இதன் விற்பனை அளவு அதிகளவில் குறைந்துள்ளது. ஜிஎஸ்டிக்கு முன் இதன் மீதான வரி 5 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications