உள்நாட்டுப் பயணிகள் விமானப் போக்குவரத்திற்கான கட்டணங்களைக் குறைப்பதற்காக இந்திய அரசு ஓலா மற்றும் உபர் செயலிகளில் டாக்ஸி மற்றும் ஆட்டோ புக் செய்வது போன்று 50 சதவீதம் வரை குறைந்த கட்டணத்தில் விமானம் புக் செய்வதற்கான திட்டம் குறித்து விவாதித்து வருகின்றது.
முதற்கட்டமாக அனைத்து விமான நிறுவனங்களையும் இணைத்து ஒரு நிறுவனம் செயல்படுத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் மொத்தம் 129 விமானம் இயக்கும் நிறுவனங்கள் உள்ளன, அவற்றில் 60 நிரந்தர விமானச் சேவை வழங்குபவை, மீதம் உள்ளவை எல்லாம் ஹெலிகாப்ட்டர் சேவை மட்டும் வழங்குபவர்கள் ஆவார்கள்.

எவ்வளவு கட்டணம் குறையும்?
பொதுவாக விமானத்தினை வாடகைக்கு அளிக்கும் நிறுவனமானது பயணக் கட்டணம், திரும்பி வருவதற்கான கட்டணம் என அனைத்தினையும் வசூலிக்கின்றன. இதுவே ஒருங்கிணைந்து செயல்படும் போது 50 சதவீதம் வரை விமான நிறுவனங்களுக்குச் செலவு குறையும்.

விமான வாடகை கட்டணம்
தற்போது இந்தியாவில் 6 முதல் 9 நபர்கள் வரை அமர்ந்து பயணம் செய்யக் கூடிய விமானம் ஒன்றை 1 மணி நேரத்திற்கு வாடகைக்கு எடுக்க 1,50,000 ரூபாய் முதல் 2,00,000 ரூபாய் வரை ஆகின்றது.

ஏர் ஒன்
மத்திய அரசு கொண்டு வர உள்ள இந்தப் புதிய விமானம் வாடகை திட்டத்திற்காக ஏர் ஒன் விமானப் போக்குவரத்து நிறுவனம் 500 சிறிய விமானங்களைச் சேவைக்கு அளிக்க முடிவு செய்துள்ளது.

சுற்றுலா
மேலும் விமானத்தினை வாடகைக்கு எடுத்துக்கொண்டு சுற்றுலா செல்வதற்கான பேக்கேஜ் திட்டங்களையும் அளிக்க இருப்பதாகவும், இதற்காக விடுதிகள் மற்றும் பிற வாகன சேவைகளுடன் ஒப்பந்தம் போடுவது குறித்து விவாதித்து வருவதாகவும் ஏர் ஒன் நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஏர் ஆம்புலென்ஸ்
இந்தியாவில் முதன் முறையாக டெல்லியைச் சேர்ந்த பிளாப்ஸ் ஏவியேஷன் நிறுவனம் இந்த மாதம் இறுதிக்குள் ஏர் ஆம்புலென்ஸ் சேவையினைத் துவங்க உள்ளது. தற்போது பிற விமான நிறுவனங்கள் அவசரக் காலத்தில் கட்டணமாக வசூலிப்பதை விட 20 சதவீதம் வரை குறைவாக ஏர் ஆம்புலென்ஸ் கட்டணத்தை வசூலிக்கவும் முடிவு செய்துள்ளது.

ஏர் ஆம்புலென்ஸ் கட்டணம்
கவுஹாத்தியில் இருந்து டெல்லி செல்ல 5,00,000 ரூபாய்க் கட்டணமாக ஏர் ஆம்புலென்ஸ் சேவைக்குப் பெறப்படுகின்றது.

ஏர் ஆம்புலென்ஸ் சேவை
ஏர் ஆம்புலென்ஸ் சேவையினை மருத்துவமனைகள் தான் வழங்குகின்றன. ஆனால் சேவை கிடைப்பது அவ்வளவு எளிதும் இல்லை. கவுகாத்தியில் இருந்து செயல்பட்டு வரும் பில்லப்ஸ் ஏவியேசன் அடுத்து ராய்ப்பூர், பாட்னாம் கொச்சி, சூரத் மற்றும் விசாகபட்டினம் ஆகிய இடங்களில் இருந்து தங்களது சேவையினை அளிக்க முடிவு செய்துள்ளது.

இன்சூரன்ஸ் நிறுவனங்கள்
ஏர் ஆம்புலென்ஸ் கட்டணத்தினைச் செலுத்துவதற்காக இன்சூரன்ஸ் நிறுவனங்களுடன் சேர்ந்து உறுப்பினர் திட்டம் ஒன்றை அறிமுகம் செய்யும் திட்டத்திலும் உள்ளனர்.