24,000 வங்கி கிளைகள், 42 கோடி வாடிக்கையாளர்கள் உடன் இந்தியாவின் மிகப்பெரிய வங்கியாகத் திகழும் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா தற்போது சிறுசிறு பின்டெக் நிறுவனங்களைக் கண்டு பயப்படுவதாகத் தெரிவித்துள்ளார் இவ்வங்கியின் புதிய தலைவர் ராஜ்னிஷ் குமார் தெரிவித்துள்ளார்.
மாற்றங்களும்.. சவால்களும்..
இன்று வங்கித் துறையில் தொழில்நுட்பத்தின் மூலம் பலதரப்பட்ட மாற்றங்களைச் சந்தித்துள்ளது. இதனால் சந்தையில் பல்வேறு சவால்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.
பின்டெக் நிறுவனங்கள்
இந்தப் போட்டியில் வங்கி சேவைகளுக்காகவே தொழில்நுட்பத்தை முழுமையாக நம்பிக் களமிறங்கியுள்ள பின்டெக் (FinTech- Financial technology) நிறுவனங்களின் போட்டி மிகப்பெரியதாக உள்ளது.
வர்த்தகம் பாதிப்பு
கடந்த 3-4 வருடத்தில் பேடிஎம் மற்றும் இட்ஸ்கேஷ் ஆகிய சில நிறுவனங்களின் மூலம் இந்திய வங்கித்துறை பலதரப்பட்ட மாற்றங்களைச் சந்தித்துள்ளது. இதில் முக்கியமாக எங்களது வர்த்தகத்தைப் பெரிதளவில் இந்தச் சிறு நிறுவனங்கள் பெறுகிறது. இது எங்களைப் பெரிதளவில் பாதித்து வருகிறது.
30 சதவீத வர்த்தகம்
இந்திய சந்தையில் 30 சதவீத வர்த்தகத்தைக் கொண்டுள்ளதை மட்டும் வைத்துக்கொண்டு இனியும் எளிமையான செயல்பாட்டில் இருக்க முடியாது. இத்தகைய சூழ்நிலை உருவாகும் என்று முன்கூடியே கண்டறிந்த காரணத்தால், அருந்ததி பட்டாசார்யா தலைமையில் பட்டி, வேலெட் மற்றும் மொபைல் பாங்கிங் போன்ற பல்வேறு டிஜிட்டல் சேவைகளை உருவாக்கப்பட்டது.
முக்கியத் திட்டங்கள்
இதன் மூலம் சந்தையில் இனி வரும் காலத்தில் பின்டெக் நிறுவனங்களுக்கு இணையாகப் போட்டி போடும் வகையில் பல்வேறு திட்டங்கள் கொண்டு வரப்படும் என ராஜ்னிஷ் குமார் கூறினார்.


Click it and Unblock the Notifications