சேமிப்புப் பழக்கத்தினை ஊக்குவிக்க வேண்டும் என்பதால் மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் சிறுசேமிப்புத் திட்டங்களில் இணைந்து முதலீடுகளைச் செய்வதை ஊக்குவிக்க மூன்று மிகப் பெரிய தனியார் வங்கிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
எனவே தேசிய சேமிப்புப் பத்திரம் போன்ற சிறு சேமிப்புத் திட்டங்கள் மட்டும் இல்லாமல் மாதாந்திர வருமான திட்டங்களிலும் தபால் நிலயங்கள் மட்டும் இல்லாமல் வங்கிகளிலும் முதலீட்டைத் துவங்க முடியும்.
மத்திய அரசு அறிவிப்பு
அன்மையில் மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி தேசிய சேமிப்பு டைம் டெபாசிட் திட்டம் 1981, தேசிய சேமிப்பு (மாதாந்திர வருவாய் கணக்கு) திட்டம் 1987, தேசிய சேமிப்பு வைப்புத்தொகை வைப்புத் திட்டம் 1981 மற்றும் என்எஸ்சி VIII போன்றவற்றை விற்க அனுமதி அளித்துள்ளது.
தனியார் வங்கிகள்
மத்திய அரசின் அறிவிப்பின் படி அனைத்துப் பொதுத் துறை வங்கிகள் மற்றும் ஐசிஐசிஐ வங்கி, எச்டிஎப்சி வங்கி மற்றும் ஆக்சிஸ் வங்கிகளிலும் சிறு சேமிப்புத் திட்டங்களில் முதலீடு செய்யலாம்.
ஏற்கனவே அனுமதி உள்ள திட்டங்கள்
தற்போது வரை இந்த வங்கிகள் பொது வருங்கால வைப்பு நிதி திட்டம், கிசான் விகாஸ் பத்ரா, சுகன்யா சம்ரிதி யோஜனா மற்றும் மூத்த குடிமக்களுக்கான சேமிப்புத் திட்டங்களில் மட்டுமே முதலீடு களை பெற்று வந்துள்ளன.
சிறு சேமிப்புத் திட்டங்களை இன்னும் பல வங்கிகளில் முதலீடு செய்ய அனுமதிப்பதன் மூலம் மேலும் பலர் முதலீடு செய்பவர்கள் அதிகரிப்பார்கள் எனக் கூறப்படுகின்றது.
பொது வருங்கால வைப்பு நிதி
பிபிஎப் எனப்படும் பொது வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் முதலீடு செய்பவர்களுக்கு ஆண்டுக்கு 7.8 சதவீத வட்டி விகிதத்தில் லாபம் அளிக்கின்றது.
கிசான் விகாஸ் பத்ரா
கிசான் விகாஸ் பத்ரா திட்டத்தில் முதலீடு செய்பவர்களுக்கு 115 மாத முதிர்வில் 7.5 சதவீதம் வரை லாபம் அளிக்கின்றது.
செல்வ மகள் திட்டம்
சுகன்யா சம்ரிதி யோஜனா எனப்படும் பெண் குழந்தைகளுக்கான சிறு சேமிப்புத் திட்டங்களில் முதலீடு செய்பவர்களுக்கு ஆண்டுக்கு 8.3 சதவீதம் வரை லாபம் கிடைக்கின்றது.
மூத்த குடிமக்களுக்கான சேமிப்புத் திட்டம்
மூத்த குடிமக்களுக்கான சேமிப்புத் திட்டத்தில் முதலீடு செய்யும் போது 5 வருட முதிர்வு காலத்தினை அடுத்து 8.3 சதவீதம் வரை லாபம் அளிக்கின்றது.
சிறு சேமிப்புத் திட்டங்கள்
2016-ம் ஆண்டு ஏப்ரல் 1 முதல் சிறு சேமிப்புத் திட்டங்கள் மீதான வட்டி விகிதத்தினை ஒவ்வொரு காலாண்டும் மாற்றி அமைத்து வருகின்றது. ஆனால் 2017-2018 நிதி ஆண்டிற்கான வட்டி விகிதத்தில் மாற்றம் ஏதும் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

பங்குச்சந்தை சரிவில் இந்த தப்பு மட்டும் பண்ணாதீங்க - முதலீட்டாளர்களுக்கு விஜய் கேடியா கூறும் டிப்ஸ்

இந்த வாரம் 4 நாட்கள், அடுத்த வாரம் 3 நாட்கள்: பங்குச்சந்தை முதலீட்டாளர்களே முதல்ல இத படிங்க

SIP முதலீடு செஞ்சா கோடிகளில் பணம் கிடைக்குமா? நம்ம எல்லாரும் செய்யுற தப்பு இது தான்..!!

ஏப்ரல் 1 முதல் அதிரடி மாற்றம்: ஏடிஎம் பரிவர்த்தனை முதல் QR ஸ்கேனர் வரை புதிய கட்டுப்பாடுகள்!

இந்திய பங்குச்சந்தைக்கு பெரிய கும்பிடு போடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்..!! மீண்டும் வருவார்களா?

எஸ்பிஐ-யின் மெகா பிளான்: மாதம் ரூ.11,000 கியாரண்டி வருமானம்! முதலீடு எவ்வளவு தெரியுமா?

கதறி கதறி அழும் வெள்ளி முதலீட்டாளர்கள்.. போட்ட காசு மொத்தமும் போச்சு..!! அடுத்தது என்ன..?

பங்குச்சந்தைய விடுங்க பிட்காயின் முதலீட்டாளர்கள் நிலைமை இன்னும் மோசம்..! ஈரான் போர் யாரையும் விட்டு வைக்கல..!

வேலைக்கு போகாமலே மாதம் ரூ50,000 - 1 லட்சம் வரை பாசிவ் வருமானம் வேண்டுமா? எப்படி சாத்தியம்?

ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அப்டேட்.. 3 மாதத்திற்கான பொருள் ஒரே நேரத்தில்.. மத்திய அரசின் முடிவு

ஆனந்த் ஸ்ரீனிவாசன்: படிச்சு படிச்சு சொன்னேன்.. யாரும் கேட்ல 'Big Drop'.. வெள்ளி அதோ கதி..!!



Click it and Unblock the Notifications