இணையதளப் பேமெண்ட் கேட்வே நிறுவனமான பேபால் உடன் இணைந்து பேஸ்புக் நிறுவனம் பணம் அனுப்பும் சேவையினை அறிமுகம் செய்துள்ளது.
பேஸ்புக்கில் பணம் அனுப்பும் சேவையினைப் பேஸ்புக் மெசஞ்சர் மூலம் மட்டும் பெற முடியும்.
வருவாய்
பேபால் நிறுவனம் தனது 2017-ம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் 24 பில்லியன் டாலர் வரை வருவாயினைப் பெற்றுள்ளது. அதுவும் 47 சதவீதம் வரை ஒரே வருடத்தில் பேபால் வருவாயினை உயர்த்தியுள்ளது.
பேஸ்புக் மெசெஞ்சர்
பேஸ்புக் மெசெஞ்சர் மூலமாகப் பணம் அனுப்புவது கூடுதல் சேவையாக அளிக்கப்பட உள்ளது, எனவே எப்போதும் போலப் பிற சேவைகளும் வழங்கப்படும்.
எதற்கெல்லாம் பயன்படுத்தலாம்?
கார் புக் செய்து பயணம் செய்யும் போது கட்டணம் செலுத்துவது, வாடகை செலுத்துவது, நண்பர்களுக்கு மற்றும் உறவினர்களுக்குப் பரிசுகள் வழங்குவது போன்றவற்றுக்குக் கட்டணத்தினைப் பேபால் பயன்படுத்திப் பேஸ்புக் மெசெஞ்சரில் செய்யலாம்.
கூடுதல் வருவாய்
சென்ற வருடம் மட்டும் பேபால் பேஸ்புக் மெசெஞ்சருடன் இணைந்ததால் அமெரிக்காவில் இருந்து மட்டும் 2.5 மில்லியன் வாடிக்கையாளர்களைக் கூடுதலாகப் பெற்றுள்ளது.
எப்படி பணம் அனுப்புவது?
பேஸ்புக் மெசெஞ்சரில் தகவல் அனுப்புவது போல நீல நிற பிளஸ் பட்டனை அழுத்துவதன் மூலம் எளிதாகப் பணத்தினை அனுப்பலாம். மேலும் பணத்தினைப் பெறுவதற்கான கோரிக்கையினையும் பெறலாம்.
மேலும் தங்களது பேஸ்புக் மெசெஞ்சரில் உள்ள தொடர்புகள் மற்றும் நண்பர்களுக்கும் பேபால் மூலமாகப் பணம் அனுப்ப முடியும்.
வாடிக்கையாளர் சேவை
இதற்காகவே பேஸ்புக் மெசெஞ்சர் பிரிவு வாடிக்கையாளர் சேவைப் பிரிவையும் அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் பணம் செலுத்தும் போது உள்ள சிக்கல்களுக்கு எல்லாம் தீர்வை அளிக்கும்.


Click it and Unblock the Notifications