கிரிப்டோகரன்சிக்கு உலக நாடுகளில் இருக்கும் முதலீட்டாளர்கள் மத்தியில் பெரிய அளவிலான வரவேற்பு கிடைத்தாலும், சில நாடுகளில் இதனைப் பரிமாற்றத்திற்கா பயன்படுத்த தடையும் விதிக்கப்பட்டுள்ளது.
ஆயினும் பல தடைகளைத் தாண்டி தொடர்ந்து இதன் மதிப்பு உயர்ந்து கொண்டே இருக்கிறது. சில மாதங்களுக்கு முன்பு பிட்காயின் மதிப்பு 5,000 டாலரை அடைந்த நிலையில் தற்போது 6,000 டாலர் என்ற புதிய உச்சத்தை அடைந்துள்ளது.
100 பில்லியன் டாலர்
இதன் மூலம் பிட்காயினின் மொத்த சந்தை மதிப்பு 100 பில்லியன் டாலரை அடைந்து அமெரிக்காவில் பல முன்னணி நிறுவனங்களைச் சந்தை மதிப்பீட்டுப் பட்டியலில் பின்னுக்குத் தள்ளியுள்ளது.
500 சதவீத லாபம்
பிட்காயினில் முதலீடு செய்ய முதலீட்டாளர்களுக்கு ஒவ்வொரு வருடமும் குறைந்தபட்சம் 500 சதவீதம் வரையிலான லாபத்தைத் தருகிறது.
டிஜிட்டல் பணம்
உலக நாடுகளில் டிஜிட்டல் பணப் பரிமாற்றம் அதிகரித்து வரும் இத்தகைய சூழ்நிலையில், டிஜிட்டல் பணமான கிரிப்டோ கரன்சி மீதும் மக்களுக்கு அதிகமான ஈர்ப்பு ஏற்பட்டுள்ளது.
நம்பிக்கை
மேலும் பிட்காயின் மதிப்பின் வளர்ச்சி சீராக இருக்கும் எனப் பல்வேறு ஆய்வுகள் கூறினாலும், அதன் மீது இன்னமும் பெரும்பான்மையான முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை வரவில்லை என்பதை நாம் ஒப்புக்கொள் வேண்டும்.


Click it and Unblock the Notifications