ஓரே நாளில் 3 லட்ச வாகனங்கள் விற்பனை.. அசத்தும் ஹீரோ மோட்டோகார்ப்..!
நாட்டின் முன்னணி இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் தீபாவளி சிறப்பு விற்பனையில் இந்தியா முழுவதும் சுமார் 3,00,000 வாகனங்களை விற்பனை அசத்தியுள்ளது.
உலகளவில் எந்த ஒரு நிறுவனமும் ஓரே நாளில் 3,00,000 வாகனங்களை விற்பனை செய்யாத நிலையில், இது உலக ஆட்டோமொபைல் நிறுவனங்களுக்குப் புது இலக்காக இருக்கிறது.

தீபாவளி பண்டிகைக்கு முன் தந்திரீயாஸ் நாளில் மட்டும் 3 லட்ச வாகனங்களை விற்பனை செய்தது மட்டும் அல்லாமல் செப்டம்பர் மாத்ததில் மட்டும் இதுவரை சுமார் 7 லட்ச வாகனங்களை விற்பனை செய்துள்ளது. அதுமட்டும் அல்லாலம ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் அதிகளவில் விற்பனை செய்ததும் இந்த மாதமும் தான்.
இதனுடன் 2017ஆம் நிதியாண்டின் 2வது காலாண்டில் மட்டும் சுமார் 20 லட்ச வாகனங்களை விற்பனை செய்துள்ளது.


Click it and Unblock the Notifications