கார் ஏற்றுமதியில் மாருதி சுசூகி முதல் இடம்..!
இந்தியாவில் பல ஆட்டோமொபைல் நிறுவனங்கள் தற்போது கார்களை தயாரித்து இந்தியாவில் விற்பனை செய்வது மட்டுமல்லாமல், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்து வருகிறது.
நடப்பு நிதியாண்டின் முதல் 6 மாத காலத்தில் சுமார் 57,300 கார்களை ஏற்றுமதி செய்து மாருதி சுசூகி ஏற்றுமதியில் முதல் இடத்தை பிடித்துள்ளது. கடந்த நிதியாண்டில் 54,008 கார்களை மட்டுமே ஏற்றுமதி செய்திருந்தது.

இந்நிலையில் ஹூண்டாய் நிறுவனம் 4வது இடத்திற்கு தள்ளப்பட்டு வோக்ஸ்வாகன் மற்றும் ஜெனரல் மோட்டார்ஸ் 2வது மற்றும் 3வது இடத்தை பிடித்துள்ளது.
கடந்த நிதியாண்டில் ஹூண்டாய் நிறுவனம் முதல் 6 மாதத்தில் 63,014 கார்களை ஏற்றுமதி செய்திருந்த நிலையில், இந்த ஆண்டு வெறும் 44,585 கார்களை மட்டுமே ஏற்றுமதி செய்துள்ளது. இது கடந்த ஆண்டை விடவும் சுமார் 29.25 சதவீதம் குறைவாகும்.


Click it and Unblock the Notifications