ஆதார் சென்டர் இலக்கை அடைய முடியாமல் நிற்கும் வங்கிகள்..!
ஆதார் பதிவு செய்யவும், புதுப்பிக்கவும் இந்தியாவில் இருக்கும் வங்கிகளில் தனியாக ஒரு பரிவை அமைக்க வேண்டும் என மத்திய அரசு தலைமையிலான UIDAI அமைப்பு உத்தரவிட்டது.
ஆக்டோபர் 31ஆம் தேதி 15,300 வங்கிகளில் இதற்கான பிரிவை அமைக்க வேண்டும் என இலக்கு நிர்ணயம் செய்யப்பட்ட நிலையில், இதுவரை 2,300 கிளைகளில் மட்டுமே அமைக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே அக்டோபர் 31 வரையில் கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ள நிலையில், இதுவரை 15 சதவீத கிளைகளில் மட்டுமே தனிப்பிரிவு துவங்கப்பட்டுள்ளது.
UIDAI உத்தரவின்படி இந்தியாவில் இருக்கும் 43 தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகளின் 15,315 கிளைகளிலும் ஆதார் எண்ணைப் பதிவு செய்யவும், புதுப்பிக்கவும் பரிவை உருவாக்க வேண்டும்.


Click it and Unblock the Notifications