நாட்டின் முன்னணி ஈகாமர்ஸ் நிறுவனமான பிளிப்கார்ட், சுமார் 4 பில்லியன் டாலர் அளவிற்குப் பணத்தை இருப்பாக வைத்துள்ளது. இதனை முறையாகப் பயன்படுத்தி அமேசான் உடன் போட்டிபோடவும், தனது வர்த்தகத்தைப் புதிய துறையில் விரிவாக்கம் செய்யவும் முடிவு செய்துள்ளது.
தன்னிடம் இருக்கும் 4 பில்லியன் டாலர் அதாவது 26,000 கோடி ரூபாயை கொண்டு முன்னணி ஸ்டார்ட்அப் நிறுவனங்களை வாங்கவும் அல்லது பெரிய அளவிலான பங்குகளைக் கைப்பற்றவும் முடிவு செய்துள்ளது.
நாலு கம்பெனி
இதன் படி பிளிப்கார்ட் நிறுவனம் தற்போது உணவு டெலிவரி நிறுவனமான ஸ்விக்கி, சர்வீச்ஸ் நிறுவனமான அர்பன் கீளாப், ஆன்லைன் பர்னீச்சர் விற்பனை நிறுவனமான அர்பன்லேடர் மற்றும் இன்சூரன்ஸ் மற்றும் சொத்து மேலாண்மை துறையில் சில நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
பேச்சுவார்த்தை
ஸ்விக்கி, அர்பன் கீளாப், அர்பன்லேடர் ஆகிய நிறுவனங்களுடன் தற்போது பிளிப்கார்ட் நிறுவனம் பேச்சுவார்த்தை மட்டுமே நடத்தி வரும் நிலையில், எவ்விதமான ஒப்பந்தமும் உறுதி செய்யப்படவில்லை.
புக் மை ஷோ
சமீபத்தில் பிளிப்கார்ட் நிறுவனம் திரைப்படம் மற்றும் நிகழ்ச்சிகளுக்கான டிக்கெட் விற்பனை செய்யும் புக் மை ஷோ நிறுவனத்தின் கணிசமான பங்குகளை 500-700 மில்லியன் டாலர் முதலீட்டில் கைப்பற்றியது.
2010 முதல் துவக்கம்..
2007ஆம் ஆண்டுத் துவங்கப்பட்ட பிளிப்கார்ட் ஆரம்பத்தில் சற்று மந்தமான வளர்ச்சியை மட்டுமே அடைந்திருந்தாலும், சில வருடங்களில் மளமளவென வளர்ச்சி அடைய துவங்கியது. இதனிடையில் பல்வேறு வென்சர் கேபிட்டல் நிறுவனத்திடம் இருந்து பல மில்லியன் டாலர் முதலீட்டை பெற்று தனது வர்த்தகத்தை விரிவாக்கம் செய்தது.
முதலீடு ஈர்ப்பு
இந்த வருடம் மட்டும் பிளிப்கார்ட் சுமார் 3 பில்லியன் டாலர் அளவிற்கு முதலீட்டை ஈர்த்தது. இந்நிலையில் தனது வர்த்தகத்தை விரிவாக்கம் செய்ய 2010ஆம் ஆண்டு முதல் நிறுவனத்தைக் கைப்பற்ற துவங்கியது.
வரிவாக்கம்
பிளிப்கார்ட் நிறுவனம் கடந்த 2010ஆம் ஆண்டு வீரீட் என்னும் நிறுவனத்தை முதல் முதலாகக் கைப்பற்றியது. அதன் பின் மைம்360, சக்பக்.காம், டெல்ஸ்பை.காம், மைந்திரா.காம், அப்பிடிரியேட், ஜபாங், போன்பே, டைனிஸ்டெப், ஈபே இந்தியா ஆகிய நிறுவனங்களைக் கைப்பற்றியதுள்ளது.
15 பில்லியன் டாலர் சந்தை
இந்தியாவில் 15 பில்லியன் டாலர் சந்தையில் நீங்கா இடத்தைப் பிடித்தது மட்டுமல்லாமல் அமெரிக்க நிறுவனான அமேசானுக்குக் கடுமையான போட்டியை அளித்து வருகிறது.
11.6 பில்லியன் டாலர் மதிப்பு
வருடத்தி்கு 15,000 கோடி ரூபாய் வருமானம் பெறும் பிளிப்கார்ட் நிறுவனத்தில் சுமார் 30,000 பேர் பணியாற்றி வருகின்றனர்.
இன்றைய நிலையில் இந்நிறுவனத்தின் மொத்த மதிப்பு 11.6 பில்லியன் டாலர்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!



Click it and Unblock the Notifications