இந்தியாவில் வேலைவாய்ப்பு குறைந்துள்ளது எனப் பல்வேறு ஆய்வு அறிக்கைகள் கூறினாலும், ஏற்றுக்கொள்ளாத அரசு அதிகாரிகளுக்காகவே முக்கியமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
பிஎஸ்ஈ500 குறியீட்டின் கீழ் இருக்கும் 241 நிறுவனங்களில் புதிதாக வேலைக்குச் சேர்ந்தோரின் எண்ணிக்கை 2016-17ஆம் நிதியாண்டில் வெறும் 66,000 ஆகக் குறைந்துள்ளது. ஆனால் இதற்கு முந்தைய ஆண்டில் இதன் எண்ணிக்கை 1,23,000ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.

இதேபோல் இந்த 241 நிறுவனங்களில் ஊழியர்களின் எண்ணிக்கை 3.19 மில்லியனில் இருந்து 3.25 மில்லியனாக மட்டுமே உயர்ந்துள்ளதாகப் பிஸ்னஸ் ஸ்டான்டர்ட் பத்திரிக்கை தெரிவித்துள்ளது.
இந்தியாவில் அதிக வேலைவாய்ப்புகளை அளிக்கும் நிறுவனங்களான டிசிஎஸ், டெக் மஹிந்திரா, ஐசிஐசிஐ வங்கி, ஆக்சிஸ் நங்கி ஆகியவற்றில் இந்த வருடம் குறைவான வேலைவாய்ப்புகளே உருவாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications