பங்குச்சந்தை கட்டுப்பாட்டு ஆணையமான செபி, கடன் நெருக்கடியால் நாட்டை விட்டு ஓடிய விஜய் மல்லையாவை எந்த ஒரு பங்குச்சந்தை நிறுவனத்தின் நிர்வாகப் பொறுப்பிலும் இருக்கக் கூடாது என்று அறிவித்துள்ளது.
இதன் படி யுனைடெட் ப்ரூவெரிஸ் நிர்வாகக் குழுவில் இருந்து விஜய் மல்லையா வெளியேற உள்ளார். இதன்மூலம் இவரது பொறுப்பில் புதிய நபரை நியமிக்கும் அனுமதியை இந்நிறுவனம் செபியிடம் கோரியுள்ளது.

மேலும் இவரது இடத்தில் ஒருவரை நியமிக்கவும் விஜய் மல்லையாவிற்கு உரிமை உண்டு.
Heineken மற்றும் மல்லையா இணைந்து உருவாக்கப்பட்ட யுனைடெட் ப்ரூவெரிஸ் நிறுவனத்தின் வாழ்நாள் தலைவராக விஜய் மல்லையா நியமிக்கப்பட்டார், அதுமட்டும் அல்லாமல் இவர் ஓய்வு பெறாத ஒரு தலைவராகவும் இருக்க இக்கூட்டணி ஒப்புதல் அளித்தது. இவர் பதவியில் இருந்து இறங்க வேண்டும் என்றால் மல்லையா ஒருவரைப் பரிந்துரைக்கலாம்.
செபியின் உத்தரவை ஏற்ற யுனைடெட் ப்ரூவெரிஸ் தற்காலிக தலைவராகச் சிஓய் பால் அவர்களை நியமித்துள்ளது.


Click it and Unblock the Notifications