7 லட்சம் கோடி மதிப்பிலான நெடுஞ்சாலை திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல்..!

இந்தியாவின் உள்கட்டுமானத்தை மேம்படுத்தவும், புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கவும், மத்திய அரசு 83,000 கிலோமீட்டர் தேசிய நெடுஞ்சாலையை அடுத்த 5 வருடத்தில் அமைக்கும் 6.9 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டத்திற்கு நாடாளுமன்றத்தில் இன்று ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று மாலை 4 மணிக்கு நிதியமைச்சர் அருண் ஜேட்லி வெளியிடுவார் எனத் தெரிகிறது.

பார்த்மாலா திட்டம்

பார்த்மாலா திட்டம்

நாடாளுமன்றத்தின் ஒப்புதல் பெற்ற 83,000 கிலோமீட்டர் தேசிய நெடுஞ்சாலை திட்டத்தின் ஒரு பகுதியாக மத்திய அரசின் கனவு திட்டமான பாரத்மாலா திட்டத்தின் முதல் பகுதிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த முதல் பகுதி திட்டத்தில் சுமார் 3.5 லட்சம் கோடி ரூபாய் முதலீட்டில் 40,000 கிலோமீட்டர் தேசிய நெடுஞ்சாலையை 2022ஆம் ஆண்டுக்குள் அமைக்கப்டும்.

 

50,000 கிலோமீட்டர்

50,000 கிலோமீட்டர்

பார்த்மாலா திட்டம் இந்தியாவின் மேற்கு எல்லை பகுதிகளைச் சாலை வழியாக இணைக்கும் ஒரு திட்டம். இத்திட்டத்தின் மூலம் மொத்தம் 50,000 கிலோமீட்டர் தொலைவிலான சாலையை அமைப்பதுதான்.

முதல் கட்டத்திட்டத்தின் மூலம் 40,000 கிலோமீட்டர் சாலையையும், 2வது கட்ட திட்டத்தில் மீதமுள்ள 10,000 கிலோமீட்டர் சாலை அமைக்கப்பட உள்ளது.

 

 இணைப்பு

இணைப்பு

இத்திட்டத்தின் வாயிலாக இந்தியாவில் 44 பொருளாதாரத் தளங்கள் மற்றும் எல்லை பகுதிகள் இணைக்கப்பட உள்ளது. இதன் மூலம் துறைமுக மற்றும் பன்னாட்டு வர்த்தகங்கள் இப்பகுதிகளில் மேம்படும் எனத் தெரிகிறது.

தேர்தல்

தேர்தல்

2019ஆம் ஆண்டுப் பொதுத் தேர்தல் வரும் நிலையில் மத்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ள மிக முக்கியத் திட்டமாக இதனைக் கருதப்படுகிறது. மேலும் இந்தியாவில் வேலைவாய்ப்புகள் குறைந்து வரும் நிலையில் இத்திட்டத்தின் மூலம் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியும் என மத்திய அரசு நம்புகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+