டெஸ்லாவை இழந்தது இந்தியா.. சீனாவிற்கு அடித்தது ஜாக்பாட்..!

ஒட்டுமொத்த ஆட்டோமொபைல் உலகையே வாயைபிளந்து பார்க்கும் வகையில் எலக்ட்ரிக் ஸ்போர்ட்ஸ் கார்களை அறிமும்க செய்த டெஸ்லா, அமெரிக்காவை விட்டு வெளிநாட்டில் துவங்கப்படும் தனது புதிய தொழிற்சாலையை இந்தியாவில் துவங்கப்படும் என அனைவராலும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சீனாவிடம் வாய்ப்பை இழந்து நிற்கிறது இந்தியா.

தேவை அதிகரிப்பு

தேவை அதிகரிப்பு

அமெரிக்காவின் புகழ்பெற்ற டெஸ்லா நிறுவனம் சந்தையில் மிகப்பெரிய வெற்றியைக் கண்டுள்ள நிலையில், தனது வாடிக்கையாளர் மத்தியில் இந்நிறுவனத்தின் கார்களின் தேவை அதிகரித்துள்ளது.

ஜிகாபேக்ட்ரி

ஜிகாபேக்ட்ரி

இதற்காக அமெரிக்காவின் நவேடா பகுதியில் இருக்கும் தனது ஜிகாபேக்ட்ரியில் மட்டுமே இதுவரை கார்களைத் தயாரித்து வந்த நிலையில், வாடிக்கையாளர்களின் தேவையைப் பூர்த்திச் செய்யும் வகையில் புதிய ஒரு தொழிற்சாலையைத் துவங்க எலான் மஸ்க் தலைமையிலான டெஸ்லா கார் நிறுவனம் முடிவு செய்தது.

கடைசிக்கட்ட தேர்வு

கடைசிக்கட்ட தேர்வு

புதிய தொழிற்சாலையை அமைக்கும் பணியில் இறங்கிய டெஸ்லா நிர்வாகம் கடைசிக்கட்ட முடிவில் இந்தியாவையும், சீனாவையும் தேர்வு செய்தது.

 எதிர்பார்ப்பு

எதிர்பார்ப்பு

தற்போது இந்தியாவில் மேக் இன் இந்தியா, அன்னிய முதலீட்டுக்களை ஈர்க்கத் தளர்த்தப்பட்டுள்ள விதிமுறைகள் மூலம் டெஸ்லா-வின் புதிய தொழிற்சாலை இந்தியாவிற்குத் தான் வரும் என அனைத்துத் தரப்பினராலும் எதிர்பார்க்கப்பட்டது.

வால் ஸ்ட்ரீட்

வால் ஸ்ட்ரீட்

இந்நிலையில் அமெரிக்காவின் வால் ஸ்ட்ரீட் பத்திரிக்கை வெளியிட்ட செய்தியின் மூலம் இந்தியா தனது வாய்ப்பை இழந்துள்ளது தெரிய வந்துள்ளது.

வால் ஸ்ட்ரீட் வெளியிட்ட செய்தியில், டெஸ்லா தனது புதிய தொழிற்சாலையை ஷாங்காய் பகுதியில் அமைக்கச் சீன அரசுடன் ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த ஒப்பந்தத்தின் படி டெஸ்லா நிறுவனம் எவ்விதமான கூட்டணியும் இல்லாமல் தனியாகத் தனது நிறுவனத்தை ப்ரீ டிரேட் சோன் பகுதியில் அமைக்க உள்ளதாகத் தெரிவித்துள்ளது.

 

டெஸ்லா

டெஸ்லா

புதிய தொழிற்சாலையின் ஒப்பந்தம் குறித்து இதுவரை எவ்விதமான அறிவிப்பையும் வெளியிடாத டெஸ்லா, ஜூன் மாதத்தில் சீனாவில் உற்பத்தி பணிகள் துவங்கலாம் என டெஸ்லா தெரிவித்தது.

சீனா

சீனா

இந்தியா போலவே சீனாவிலும் வெளிநாட்டு நிறுவனங்கள் தன் நாட்டில் உற்பத்தியை துவங்க வேண்டும் என்றால் உள்நாட்டு நிறுவனத்துடன் கூட்டணி வைக்க வேண்டும். இதில் வரும் லாபம் நஷ்டம் அனைத்தும் இரு நிறுவனங்களும் சதவீத வாரியாகப் பங்கீடு செய்துகொள்ள வேண்டும்.

தற்போது சீனாவில் உருவாகும் புதிய தொழிற்சாலை டெஸ்லா சீனா மற்றும் டெஸ்லா அமெரிக்கா உடன் அனைத்து உருவாக்கப்படும் எனத் தெரிகிறது.

 

இந்தியா

இந்தியா

இந்தியாவில் டெஸ்லா தனது தொழிற்சாலையை அமைக்கப் போக்குவரத்துத் துறை அமைச்சரான நத்தின் கட்கரி துறைமுகத்தின் அருகில் நிலத்தை வழங்குவதாக டெஸ்லாவிற்கு அழைப்பு விடுத்தார், ஆனால் டெஸ்லா பதில் அளிக்கவில்லை.

மோடி

மோடி

மேலும் பிரதமர் மோடியின் அமெரிக்கப் பயணத்தில் கலிபோர்னியாவில் இருக்கும் மற்றொரு தொழிற்சாலையில் மோடி எலான் மஸ்க் அவர்களைச் சந்தித்து இந்தியாவிற்ரு அழைப்பு விடுத்தது குறிப்பிடத்தக்கது.

ஆட்டோமொபைல் சந்தை

ஆட்டோமொபைல் சந்தை

தற்போது ஆட்டோமொபைல் சந்தையில் எலக்ட்ரிக் கார்களே முக்கிய அம்சமாக உள்ளது. இந்தியாவில் 2030ஆம் ஆண்டுக்குள் 50 சதவீத கார்கள் எலக்ட்ரிக் கார்களாகத் தான் இருக்கும் என ஆய்வுகள் கூறுகிறது.

மஹிந்திரா & மஹிந்திரா

மஹிந்திரா & மஹிந்திரா

இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் எலக்ட்ரிக் கார்களைத் தயாரித்து அதிகளவில் விற்பனை செய்திருக்கும் ஓரே நிறுவனம் மஹிந்திரா & மஹிந்திரா. டெஸ்லா சீனாவிற்குச் சென்றதன் மூலம் மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனத்திற்கு இது மிகப்பெரிய வாய்ப்பாகும்.

டாடா

டாடா

கார் தயாரிப்பில் ஏற்கனவே கொடிக்கட்டி பறக்கும் டாடா மோட்டார்ஸ் மத்திய அரசின் எலக்ட்ரிக் கார் ஆர்டரை பெற்றுள்ளதன் மூலம் எலக்ட்ரிக் கார் தயாரிப்பில் இறங்க முடிவு செய்துள்ளது.

இந்தியாவில் வாய்ப்பு

இந்தியாவில் வாய்ப்பு

இந்தியாவில் ஆடம்பர பொருட்களுக்கான சந்தை சீனாவை ஒப்பிடும் போது சற்று குறைவாகவே இருக்கிறது. மேலும் இஃபரா தொழில்நுட்ப வளர்ச்சியிலும், சாலை வசதிகளிலும் சீனாவை ஒப்பிடும்போது இந்தியாவில் சற்று மோசமான நிலையிலேயே உள்ளது.

இதனை கருத்தில் கொண்டே டெஸ்லா இந்தியாவை கைவிட்டிருக்கும்.

 

விற்பனை

விற்பனை

இந்திய பொருளாதாரமும், வர்த்தகமும் பெரிய அளவில் வளர்ச்சி அடைந்திருந்தாலும் ஆடம்பர காருக்கு இந்தியாவில் கொஞ்சம் மவுசு கம்மிதான்.

இந்த விஷயத்தில் சீனாவை ஒப்பிடுகையில் டெஸ்லா நிறுவனத்திற்கு கூடுதலான வர்த்தக வாய்ப்புகள் உள்ளது.

 

திடீர் முடிவு

திடீர் முடிவு

 

 

எச்சரிக்கை..!

எச்சரிக்கை..!

கலையலங்காரா

கலையலங்காரா

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+