கணிப்புகளை உடைத்து ரூ.3,726 கோடி லாபத்தைப் பெற்றது இன்போசிஸ்..!

நாட்டின் முன்னணி மென்பொருள் ஏற்றுமதி நிறுவனமான இன்போசிஸ் செவ்வாய்க்கிழமை 2017-18ஆம் நிதியாண்டின் 2வது காலாண்டு முடிவுகளை வெளியிட்டுள்ளது.

அமெரிக்க அரசின் நெருக்கடியின் மூலம் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள இந்தியா ஐடி நிறுவனங்கள் மத்தியில் பிற போட்டி நிறுவனங்களை விடவும் இன்போசிஸ் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது. அதனுடன் இன்போசிஸ் நிர்வாகத்தின் மத்தியில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் இன்போசிஸ் வர்த்தகத்திற்குக் கூடுதலான பாதிப்பை இக்காலாண்டில் அளித்தது.

ஆயினும் சந்தை கணிப்புகளைத் தாண்டி லாபத்தைப் பெற்றுள்ளது இன்போசிஸ்.

வருவாய்

வருவாய்

இன்போசிஸ் நிறுவனம் செயல்பாட்டு மற்றும் இதர வருமானத்தையும், சேர்த்து மொத்த வருமானமாகச் செப்டம்பர் காலாண்டில் 18,450 கோடி ரூபாய் பெற்றுள்ளது. ஜூன் காலாண்டில் இதன் அளவு 17,892 கோடியாகவும், கடந்த நிதியாண்டின் செப்டம்பர் காலாண்டில் 18,070 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

லாபம்

லாபம்

செப்டம்பர் காலாண்டில் இந்நிறுவனத்தின் லாபம் குறைவாக இருக்கும் எனக் கணிக்கப்பட்ட நிலையில் யாரும் எதிர்பார்க்காத வகையில் 3,726 கோடி ரூபாயாகப் பெற்றுள்ளது.

இது முதலீட்டாளர்கள் மத்தியில் கூடுதலான நம்பிக்கையை அளித்துள்ளது. ஜூன் காலாண்டில் இது 3,483 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

 

 டாலர் வருமானம்

டாலர் வருமானம்

இக்காலாண்டில் இன்போசிஸ் நிறுவனத்தின் டாலர் வருவாய் அளவீடுகள் 2.9 சதவீதம் வரையில் குறைந்துள்ளது.

ஈவுத்தொகை

ஈவுத்தொகை

இன்றைய காலாண்டு முடிவுகள் வெளியிட்ட இன்போசிஸ் தனது முதலீட்டாளர்களுக்கு ஒரு பங்கிற்கு 13 ரூபாய் ஈவுத்தொகை அளிக்க உள்ளதாக அறிவித்துள்ளது.

வளர்ச்சி விகிதம்

வளர்ச்சி விகிதம்

இன்போசிஸ் நிறுவனம் கடந்த முறை காலாண்டு முடிவுகளை வெளியிட்டபோது தனது வளர்ச்சி விகிதத்தை 8.5 சதவீதத்தில் இருந்து 6.5 சதவீதமாகக் குறைந்த நிலையில் தற்போது 6.5 சதவீதத்தில் இருந்து 5.5 சதவீதமாகக் குறைத்துள்ளது.

துறைவாரியான வளர்ச்சி

துறைவாரியான வளர்ச்சி

இக்காலாண்டில் இன்போசிஸ் நிறுவனத்தின் முக்கிய வர்த்தகப் பிரிவான நிதியியல் துறையின் வருவாய் 4,718 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இதைத் தொடர்ந்து உற்பத்தி, எனர்ஜி, ரீடைல், லைப் சையின்ஸ், ஹெய் டெக் பிரிவு துறையை வர்த்தகத்தின் வருவாய் கணிசமான அளவில் மட்டுமே உயர்ந்துள்ளது.

புதிய சீஇஓ

புதிய சீஇஓ

இக்காலாண்டு முடிவுகள் அறிவிக்கும் போது புதிய சீஇஓ அறிவிப்பு குறித்து அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இன்போசிஸ் நிர்வாகம் எவ்விதமான அறிவிப்பு வெளியிடவில்லை.

நிறுவன கைப்பற்றல்

நிறுவன கைப்பற்றல்

இக்காலாண்டில் இன்போசிஸ் நிறுவனம் பிரிட்டன் நாட்டின் டிசைன் மற்றும் வாடிக்கையாளர் சேவை நிறுவனமான பிரிலியன்ட் பேசிக்ஸ் ஹோல்டிங்க்ஸ் நிறுவனத்தை முழுமையாகக் கைப்பற்றியுள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+