இந்திய ஐடி நிறுவனங்கள் செப்டம்பர் காலாண்டில் பல வர்த்தக ரீதியான பிரச்சனைகளைச் சந்தித்தாலும், முதலீட்டாளர்களுக்குச் சாதகமான காலாண்டு முடிவுகளையே வெளியிட்டு வருகிறது.
செவ்வாய்க்கிழமை இன்போசிஸ் நிறுவனம் தனது காலாண்டு முடிவுகளை வெளியிட்ட நிலையில் புதன்கிழமை ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ் நிறுவனம் தனது செப்டம்பர் 30 வரையிலான காலாண்டு முடிவுகளை வெளியிட்டுள்ளது.
லாபம்
ஜூன் காலாண்டில் 2,171 கோடி ரூபாயை லாபமாகப் பெற்ற ஹெச்சிஎல் செப்டம்பர் காலாண்டில் 0.8 சதவீத உயர்வுடன் 2,188 கோடி ரூபாயை லாபமாகப் பெற்றுள்ளது.
கடந்த நிதியாண்டின் செப்டம்பர் காலாண்டில் இது 2,014 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
வருவாய்
ஜூன் காலாண்டை ஒப்பிடுகையில் ஹெச்சிஎல் நிறுவனத்தின் வருவாய் அளவு 2.3 சதவீதம் அளவிற்கு உயர்ந்து 12,434 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
வளர்ச்சி
இன்போசிஸ் தனது வரத்த்க வளர்ச்சி அளவீட்டை 5.5 -6.5 சதவீதம் வரையில் குறைந்துள்ள நிலையில் ஹெச்சிஎல் இந்த வருடம் 10.5 -12.5 சதவீதம் வரையிலான வளர்ச்சியைப் பெறும் எனத் தெரிவித்துள்ளது.
முக்கியத் துறை
நாட்டின் முன்னணி ஐடி நிறுவனங்களுக்கு வங்கித்துறை சேவைகள் மிக வருவாய் பங்கீட்டை அளிக்கும் நிலையில் ஹெச்சிஎல் நிறுவனத்திற்கு உற்பத்தி சுமார் 22.3 சதவீத வருவாய் பங்கீட்டை அளிக்கிறது.
இதைதொடர்ந்து நிதி சேவையில் 15.4 சதவீதம், பொதுச் சேவை 14.5 சதவீதம், ரீடைல் சேவையில் 9.2 சதவீதம், லைப்சையின்ஸ் 7.4 சதவீத வருவாய் பங்கீட்டை அளிக்கிறது.
வாடிக்கையாளர்
செப்டம்பர் 30 உடன் முடிந்த காலாண்டில் 5 மில்லியன் மதிப்பிலான ஆர்டரில் 24 புதிய வாடிக்கையாளர்களைப் பெற்றுள்ளது. இதைதொடர்ந்து 10 மில்லியன் டாலரில் 11, 20 மில்லியன் டாலரில் 2, 40 மில்லியன் டாலரில் 3, 50 மில்லியன் டாலரில் 5, 100 மில்லியன் டாலரில் 1 வாடிக்கையாளர்களைப் பெற்றுள்ளது.
சேவை விரிவாக்கம்
இக்காலாண்டில் ஹெச்சிஎல் நிறுவனம் ஐபிஎம் நிவனத்துடனான சேவையை விரிவாக்கம் செய்ய முடிவு செய்துள்ளது. இதன் மூலம் கூடுதலான வாடிக்கையாளர்களைப் பெற முடியும் எனவும் இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஊழியர்கள் எண்ணிக்கை
ஜூன் 30இல் இந்நிறுவனத்தில் 1,17,781 ஊழியர்கள் மட்டுமே இருந்த நிலையில், செப்டம்பர் முடிவில் இதன் எண்ணிக்கை 1,19,040 ஆக உயர்ந்துள்ளது.
ஊழிர்கள் வெளியேற்ப்பு
ஹெச்சிஎல் நிறுவனத்தில் ஊழியர்கள் வெளியேற்ற விகிதம் 16.2 சதவீதத்தில் இருந்து 15.7 சதவீதமாகக் குறைந்துள்ளது.


Click it and Unblock the Notifications