ஆதார் எண்ணுடன் மொபைல் சிம்-ஐ உங்கள் வீட்டில் இருந்தே இணைக்கலாம்.. எப்படி?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

புதிய முயற்சியாக மொபைல் எண்ணுடன் ஆதார் எண்ணை வீட்டில் இருந்தபடியே இணைப்பதற்கான சேவையினை நரேந்திர மோடி அரசு அறிமுகம் செய்துள்ளது.

 

ஏற்கனவே மொபைல் எண் வாங்கிப் பயன்படுத்தி வருபவர்கள் ஆதார் எண்ணுடன் மொபைல் எண்ணை இணைக்க வேண்டும் என்று அனைத்துத் தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்களும் எஸ்எம்எஸ் மூலம் தகவல் அனுப்பி வருகின்றன. இந்தச் சேவை மூலமாக எளிதாக ஆதார் எண்ணை மொபைல் எண்ணுடன் மறு சரிபார்ப்புச் செய்து, ஒரு முறை கடவுச் சொல் பெற்று இணைக்க முடியும்.

வீடு வீடாகச் சரிபார்ப்பு

வீடு வீடாகச் சரிபார்ப்பு

ஊனமுற்றவர்கள், உடல் நலம் குன்றியவர்கள் மற்றும் மூத்த குடிமக்கள் உள்ளிட்டவர்களின் வீட்டிற்குச் சென்று டெலிகாம் நிறுவனங்கள் சரிபார்ப்பு முறையினைப் பெறும்.

இணையதளச் சரிபார்ப்பு

இணையதளச் சரிபார்ப்பு

இதற்கான கோரிக்கையினை வாடிக்கையாளர்கள் அளிக்க இணையதளம் மற்றும் பிற வசதிகளை ஏற்பாடு செய்து தருமாறு டெலிகாம் நிறுவனங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

ஒரு முறை கடவுச்சொல் முறை

ஒரு முறை கடவுச்சொல் முறை

ஏற்கனவே ஆதார் கார்டுடன் இணைக்கப்பட்டுள்ள மொபைல் எண்களுக்கு எளிதாக ஒரு முறை கடவுச் சொல் மூலம் இணைக்கலாம். ஆதார் கார்டில் ஒரு மொபைல் எண்ணிற்கு இணைப்பைச் செய்ய வேண்டிய மொபைல் எண் வேறாக இருந்தால் கைவிரல்ரேகையும் தேவைப்படும்.

புதிய சிம்
 

புதிய சிம்

புதிய சிம் கார்டுடன் மொபைல் எண் பெறும் போது 12 இலக்க ஆதார் எண் கொண்ட அடையாள எண்ணைச் சமர்ப்பிக்க வேண்டும் என்பது கட்டாயம் ஆகும்.

அரசு நல /மானிய திட்டங்கள்

அரசு நல /மானிய திட்டங்கள்

மத்திய மற்றும் மாநில நல /மானிய திட்டங்களில் ஆதார் இணைக்க வேண்டும் என்பதற்கான கடைசித் தேசியை அக்டோபர் 31-ல் இருந்து 2017 டிசம்பர் 31 வரை நீட்டிப்பதாக மத்திய அரசு தெரிவித்து இருந்தது. தற்போது அதனை மீண்டும் 2018 மார்ச் 31 வரை நீட்டிப்பதாக உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆர்பிஐ

ஆர்பிஐ

வங்கி கணக்கில் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயம் இல்லை என்று ஆர்டிஐ கேள்வி ஒன்றுக்கு ஆர்பிஐ பதில் அளித்து இருந்தது. ஆனால் 24 மணி நேரத்தில் பண மோசடி சட்டத்தின் கீழ் வங்கி கணக்கில் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்பது கட்டாயம் எனக் கருத்தினைத் திரும்பப்பெற்றது.

ஆதார் - பான் இணைப்பு

ஆதார் - பான் இணைப்பு

ஆதார் பான் இணைவைச் செய்வது எப்படி?

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

How to link Aadhaar number to SIM card mobile number in Doorstep?

How to link Aadhaar number to SIM card mobile number in Doorstep?
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X