பார்த்மாலா மற்றும் வங்கிகளுக்கு நிதியுதவி செய்வதன் மூலம் பொருளாதாரம் வளர்ச்சி அடையுமா..?

மத்திய அரசின் செவ்வாய்க்கிழமை அறிவித்த பாரத்மாலா என்னும் மிகப்பெரிய சாலை அமைக்கும் திட்டத்தை அறிவித்தது.

இதுகுறித்து என்டிடிவி தொலைக்காட்சியில் நடந்த விவாதத்தில் இத்திட்டம் பழைய வைன்-ஐ புதிய பாட்டிலில் அடைப்பது போன்றது எனச் செய்தி தொகுப்பாளர் தெரிவித்தார்.

மேலும் அவர் ஜிஎஸ்டி மற்றும் பணமதிப்பிழப்பு நடவடிக்கை இந்திய பொருளாதாரத்தின் மிகப்பெரிய மாற்றமாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் எவ்விதமான பலனும் அளிக்கவில்லை. இந்நிலையில் தற்போது அறிவித்துள்ள பாரத்மாலா திட்டம் எப்படி இருக்கப்போகிறது எனக் கேள்வி எழுப்பினார்.

பார்த்மாலா மற்றும் வங்கிகளுக்கு நிதியுதவி செய்வதன் மூலம் பொருளாதாரம் வளர்ச்சி அடையுமா..?

இதைத் தொடர்ந்து பேசிய சுனில் அலக், நான் யார் சிறப்பாக ஆட்சி செய்தார்கள் என்று பேச விரும்பவில்லை என்றும், ஜிஎஸ்டி உண்மையிலேயே ஒரு சிறப்பான திட்டம் ஆனால் அமல்படுத்திய முறையே மேசமானதாக உள்ளது. இதே போல் இந்தியாவில் எந்த ஒரு திட்டமும் சரியான முறையில் அமல்படுத்தியதாக எனக்குத் தெரிவில்லை எனக் கூறினார்.

தற்போது இந்தியாவில் தான் 3 பிரச்சனை இருப்பதாகப் பார்ப்பதாகக் கூறினார். அவை

1. வங்கிகள் தற்போது சிறு நிறுவனங்களுக்குக் கடன் அளிப்பதில்லை இது நாட்டின் வளர்ச்சி பெரிய தடையாக இருக்கும்.

2. நுகர்வோர் சந்தையில் தேவை அதிகளவில் குறைந்துள்ளது.

3. நடப்பு கணக்குப் பற்றாக்குறை மிகவும் முக்கியமானதாக உள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் ஒரு நாட்டில் வேலைவாய்ப்பு உருவாக வேண்டுமெனில் சரியான உள்கட்டமைப்பு மூலமாகவே உருவாக்க முடியும். தற்போது நிதியமைச்சர் அருண் ஜேட்லி மிகப்பெரிய நெடுஞ்சாலை திட்டத்தை அறிவித்துள்ளார். இதன் மூலம் அதிகளவிலான வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று சுனில் அலக் கூறினார்.

பார்த்மாலா மற்றும் வங்கிகளுக்கு நிதியுதவி செய்வதன் மூலம் பொருளாதாரம் வளர்ச்சி அடையுமா..?

இதைத் தொடர்ந்து நெறியாளர் பேசுகையில் வருடத்திற்கு 4.5 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் எனக் கூறப்பட்டுள்ள நிலையில் அடுத்த 2 வருடத்திற்கு இத்திட்டம் நீடிக்குமானால் 10 லேலைவாய்ப்புகள் இந்திய சந்தைக்கு இது போதுமானதா என்று கேள்வி எழுப்பினார்.

அதனுடன் மத்திய அரசு வங்கிகளுக்கு அளிக்த 2.11 லட்சம் கோடி ரூபாய் நிதியுதவி குறித்து விவாதம் சூடுபிடித்தது.

ஜூலை மாதத்தில் ஜிஎஸ்டி அமலாக்கம் செய்யப்படும் காரணத்தால் ஜூன் காலாண்டில் உற்பத்தி முதல் விற்பனை நிறுவனங்கள் வரை அனைத்தும் இருப்பு சரக்குகளைத் தீர்க்கும் பணியில் இருந்ததால், நாட்டின் பொருளாதாரம் மந்தமாக இருந்தது மோகன்தாஸ் பாய் கூறினார்.

பார்த்மாலா மற்றும் வங்கிகளுக்கு நிதியுதவி செய்வதன் மூலம் பொருளாதாரம் வளர்ச்சி அடையுமா..?

ஜிஎஸ்டி அமலாக்கம் செய்யப்பட்ட பின் ஆகஸ்ட் மாதத்தில் 93,000 கோடி ரூபாய் வரி வசூல் செய்யப்பட்டுள்ளது இது இந்திய பொருளாதாரத்திற்கு எவ்விதமான பெரிய பாதிப்புகளையும் ஏற்படுத்தவில்லை.

இந்திய வங்கிகளில் குவித்திருக்கும் வராக் கடனில் பெரும் பகுதி உள்கட்டுமான நிறுவனங்கள் அதாவது, கட்டுமானம், எஃகு மற்றும் ஸ்டீல் உற்பத்தி, மின்சார உற்பத்தி, துறைமுக மேம்பாட்டு நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்திய சந்தையில் தேவையின் அளவு அதிகளவில் குறைந்துள்ள காரணத்தால் இத்துறை நிறுவனங்கள் கூடுதல் முதலீடு செய்யத்தாலும் உபரி உற்பத்தி மட்டுமே செய்ய முடியும் இதனால் நிறுவனங்களுக்கும் புதிய வர்த்தகம் இல்லாமல் நிற்கிறது என மனிப்பால் கல்வி நிறுவனத்தின் தலைவர் மோகன்தாஸ் பாய்த் தெரிவித்துள்ளார்.

பார்த்மாலா மற்றும் வங்கிகளுக்கு நிதியுதவி செய்வதன் மூலம் பொருளாதாரம் வளர்ச்சி அடையுமா..?

இந்நிலையில் தற்போது பொதுத்துறை நிறுவனங்கள் கூடுதலாக முதலீடு செய்தால் பொருளாதார வளர்ச்சி சீரடையும், மேலும் வேலைவாய்ப்பு ஒவ்வொரு வருடமும் 50-60 வேலைவாய்ப்புகள் இந்தியாவில் உருவாக்கப்பட்டுத் தான் வருகிறது.

ஆனால் தேவையை ஈடு செய்யும் அளவிற்கு உருவாக்கப்படுகிறதா என்று பார்த்து சற்று குறைவாகவே உருவாக்கப்பட்டு வருகிறது எனப் பாய் தெரிவித்தார்.

மோகன்தாஸ் பாய் அவர்களைத் தொடர்ந்து பவன் கீரா காங்கிரஸ் கட்சியின் செய்திதொடர்பாளர் பேசுகையில், பணமதிப்பிழப்புப் பின் இந்தியா முழுவதும் முடங்கிடந்த பணம் வங்கிகளுக்குள் வந்த நிலையில் தற்போது மீண்டும் எதற்காக 2.11 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு நிதியுதவி செய்ய வேண்டும் எனக் கேள்வி எழுப்பினார்.

மேலும் இந்தப் பணம் எங்கு இருந்து வரப்போகிறது வரி, செஸ் மூலமாகவா என்றும் கேட்டார். அதுமட்டும் அல்லாமல் பாய் தெரிவித்த வேலைவாய்ப்பு எண்ணிக்கை குறித்தும் முழுமையாக மறுத்தார் பவன்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+