இந்தியாவின் முன்னணி மென்பொருள் ஏற்றுமதி நிறுவனமான இன்போசிஸில் கடந்த சில மாதமாக நிர்வாகத்திற்கும், நிறுவனர்களுக்குப் பிரச்சனை நிலவி வந்தது. இந்தப் பிர்சனையின் காரணமாகவே விஷால் சிக்கா தனது சிஇஓ பதவியில் இருந்து வெளியேறினார்.
இந்நிலையில் நிறுவனர்கள் குழுவின் தலைவரான நாராயணமூர்த்தி எழுப்பிய அனைத்து குற்றச்சாட்டுகளும் பொய்யானது.
முதல் குற்றச்சாட்டு..
நாராயணமூர்த்திக்கு பெயர் வெளியிடாத நபர் ஒருவர், இன்போசிஸ் கைப்பற்றிய பனாயா நிறுவனத்தை நிர்வாகம் உண்மையான விலையை விடவும் அதிகத் தொகை கொடுத்து வாங்கியுள்ளது என அவருக்கு மின்னஞ்சல் வந்தது.
இதற்காக நாராயணமூர்த்திச் சேஷசாயி தலைமையிலான நிர்வாகத்தையும், விஷால் சிக்காவையும் குற்றம்சாட்டினார். அதுமட்டும் அல்லாமல் இதனைத் தனிப்பட்ட முறையில் விசாரணை செய்ய வேண்டும் எனவும் நாராணயமூர்த்திக் கோரினார்.
2வது குற்றச்சாட்டு
இதேபோல் இன்போசிஸ் நிறுவனத்தை விட்டு வெளியேறிய முன்னால் தலைமை நிதியியல் அதிகாரியான ராஜீவ் பன்சால் அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட அதிகப்படியான வெளியேற்றச் சம்பளம்.
இதற்கும் நாராயணமூர்த்தி முன்னாள் நிர்வாகத் தலைவர் சேஷசாயி அவர்களைக் குற்றம்சாட்டினார்.
புதிய நிர்வாகம்
இந்தப் பிரச்சனை இன்போசிஸ் தலைமை அலுவலகத்தில் பெரிதாக வெடித்த நிலையில், சேஷசாயி நிறுவன பணியை விட்டவே விலகிவிட்டார். அதனுடன் விஷால் சிக்கா தனது சீஇஓ பதவியை ராஜினாமா செய்து விட்டு வெறும் 1 ரூபாய் சம்பளத்தில் நேரடி நிர்வாகத்தில் அல்லாத பொறுப்பில் பணியாற்றி வருகிறார்.
இதனைத் தொடர்ந்து தற்காலிக சிஇஓவாகப் பிரவின் ராவ் மற்றும் நிர்வாகத் தலைவராக இன்போசிஸ் நிறுவனர்களில் ஒருவரான நந்தன் நிலகனி நியமிக்கப்பட்டார்.
விசாரணை
200 மில்லியன் டாலர் மதிப்பிலான பனாயா நிறுவன கைப்பற்றல் குறித்து Gibson Dunn & Crutcher என்னும் தனியார் நிறுவனம் ஜூன் மாதத்தில் விசாரணை செய்யத் துவங்கியது.
முடிவு
இந்த விசாரணை முடிவில் இன்போசிஸ் நிறுவனத்தில் பனாயா நிறுவன கைப்பற்றில் எவ்விதமான முறைகேடான பணிகள் நடக்கவில்லை, குற்றச்சாட்டுகளுக்குத் தகுந்த ஆதாரங்களும் எதுவும் இல்லை. மேலும் நிறுவன மதிப்பீட்டு மற்றும் செலவிடுகளிலும் எந்த முறைகேடும் நடக்கவில்லை எனத் தெரிவித்துள்ளதாகச் செவ்வாய்க்கிழமை காலாண்டு முடிவுகளை வெளியிடும்போது நந்தன் கூறினார்.
ராஜீவ் பன்சால்
மேலும் ராஜீவ் பன்சாலுக்கு அளிக்கப்பட்ட severance packageஇல் சற்றுக் கவனத்தைச் செலுத்தி இருக்கலாம். இதுபோன்ற நிகழ்வு இனி இன்போசிஸ் நிறுவனத்தில் நடக்காது என நந்தன் அனைத்து குற்றசாட்டுகளுக்கும், பிரச்சனைகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்தார்.
நாராயணமூர்த்தி
இந்திய மென்பொருள் துறையில் மிகவும் மதிக்கப்படும் தலைவர்களில் ஒருவரான நாராயணமூர்த்தியே இக்குற்றச்சாட்டுகளை முன்வைத்த காரணத்தினால் தான் இந்த விசாரணை நடத்தப்பட்டது. எனவே விசாரணையின் முடிவில் நாராயணமூர்த்தியின் குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரங்களும் ஏதுமில்லை எனத் தெரியவந்துள்ளது.
விஷால் சிக்கா
இந்நிலையில் தன் மீது குற்றம் ஏதுமில்லாமல் விஷால் சிக்கா பதவி விலகியதே தற்போது ஊழியர்கள் மத்தியில் உறுத்தலாக உள்ளது.
பல உயரதிகாரிகள்
விஷால் சிக்கா பதவியை விட்டு வெளியேறியதற்கு முன்னும் பின்னும் பல இன்போசிஸ் நிறுவனத்தில் இருந்து பல உயர் அதிகாரிகள் வெளியேறினர்.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?



Click it and Unblock the Notifications