ஓரே நாளில் 50,000 கோடி ரூபாயை பெற்ற ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா..!
மத்திய அரசின் நிதி உட்செலுத்துதல் குறித்து அறிவிப்பு வெளியான காரணத்தால் இன்று மும்பை பங்குச்சந்தையில் பொதுத்துறை வங்கிகளின் பங்குகள் அதிகளவிலான உயர்வை சந்தித்தது.
இதில் நாட்டின் மிகப்பெரிய வங்கிகளில் ஒன்றான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா இன்று 20 சதவீதம் வரையில் உயர்ந்துள்ள நிலையில் ஓரே நாளில் இவ்வங்கியின் சந்தை மூலதனம் சுமார் 50,000 கோடி ரூபாய் வரையிலான உயர்வை சந்தித்துள்ளது.

இன்று வர்த்தக துவக்கத்தில் 279.95 ரூபாயில் துவங்கிய எஸ்பிஐ வங்கி பங்குகள், 316.45 வரையில் உயர்ந்து 52 வார உயர்வை அடைந்துள்ளது.
இந்த உயர்விற்கு மத்திய அரசு நேற்று அறிவித்த 2.11 லட்சம் கோடி ரூபாய் அளவிலான நிதி உட்செலுத்துதல் குறித்த அறிவிப்பே முக்கிய காரணமாக அமைந்தது.


Click it and Unblock the Notifications