அரசு வழங்கு பலதரப்பட்ட திட்டங்களில் ஆதார் இணைக்க வேண்டும் என்பதற்கான காலக்கெடுவை 2018 மார்ச் 31 வரை நீட்டித்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதற்கும் முன்பு அக்டோபர் 31-ம் தேதிக்குள் ஆதார் இணைப்பைச் செய்ய வேண்டும் என்று இருந்த தேதியை 2017 டிசம்பர் 31 வரை நீட்டிப்பதாக உச்ச நீதிமன்றத்திடம் மத்திய அரசு தெரிவித்தது.
நீட்டிப்பு
புதன்கிழமை உச்ச நீதிமன்றத்தில் அட்டர்னி ஜெனரல் கே.கே. வேணுகோபால் அரசு நல திட்டங்களில் பொது மக்கள் ஆதார் இணைப்பதற்கான கடைசித் தேதியினை 2018 மார்ச் 31 வரை நீட்டித்து இருப்பதாகத் தெரிவித்தார்.
அழுத்தம் தர கூடாது
முத்த வழக்கறிஞர் ஷான் திவான் ஆதார் குறித்து விரவில் கூடுதலாக விவாதிக்க்கப்பட உள்ளது என்றும், மத்திய அரசு 2018 மார்ச் 31 வரை இணைப்பதற்கான காலக்கெடுவை நீட்டித்துள்ள நிலையில் விருப்பம் இல்லாதவர்களை இணைப்புச் செய்யக் கூறி அழுத்தம் தர கூடாது என்றும் தெரிவித்துள்ளார்.
விவாதிக்க வேண்டியவை
ஆதார் எண்ணை வங்கி கணக்கு, மொபைல் எண் மற்றும் பிற திட்டங்களில் இணைக்கவில்லை என்றால் மத்திய அரசு அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என்பது பற்றிக் கடைசி வாய்தாவிற்குள் முடிவு எடுக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.
முக்கிய விவகாரங்கள்
ஆதார் இணைப்பு குறித்த சில முக்கிய விவகாரங்களில் மத்திய அரசுடுன் ஆலோசனை பெற வேண்டும் அட்டர்னி ஜெனரல் கூறியதற்குத் திங்கள் கிழமைக்கு முன்னர் இந்த விஷயத்தைக் குறிப்பிட வேண்டும் என்று மத்திய அரசை நீதிமன்றம் கேட்டுக்கொண்டது.


Click it and Unblock the Notifications