இலவச திட்டங்கள் மூலம் இமாலய வளர்ச்சி அடைந்துள்ள முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ இனி வரும் காலங்களில் ஒவ்வொரு மாதமோ அல்லது சில மாதங்களின் இடைவேளையில் கட்டணத்தை உயர்த்தும் என உலகின் முன்னணி தரகு நிறுவனமான கோல்டுமேன் சாச்சிஸ் தெரிவித்துள்ளது.
இதன் படி அடுத்தக் கட்டண உயர்வு கட்டண உயர்வு 2018 ஜனவரி மாதத்தில் இருக்கும் எனத் தனது கணிப்பை வெளியிட்டுள்ளது கோல்டுமேன் சாச்சிஸ்.
15 சதவீத கட்டண உயர்வு
இலவச சேவை, மலிவான சேவை ஆகியவற்றில் இருந்து ஜியோ சந்தையில் இருக்கும் போட்டி நிறுவனங்களுக்கு இணையான கட்டணத்தில் சேவை அளிக்கும் எனத் தெரிகிறது.
கடந்த வாரம் ஜியோ வெளியிட்ட புதிய சேவைக் கட்டணத்தைப் பார்த்தால், டெலிகாம் சந்தையில் இருக்கும் விலை போரை தணிக்கும் வகையில் சுமார் 15-20 சதவீதம் வரையில் ஜியோ கட்டணத்தை உயர்த்தியுள்ளது.
நாட்கள் குறைப்பு
கோல்டுமேன் சாச்சிஸ் கணிப்பின் படி இனி வரும் நாட்களில் ஜியோ கட்டணத்தை உயர்த்தாமல், சேவைத் திட்டத்தின் நாட்களைக் குறைக்கும். அதாவது தற்போது 49 நாட்களுக்கு வழங்கப்படும் 309 திட்டத்தை 28 நாட்களாகக் குறைக்கும்.
இதன் மூலம் நீங்கள் பெறும் சேவைக்கான கட்டணம் மறைமுகமாக உயர்த்தப்படும்.
பிரபலமான திட்டம்..
கடந்த வாரம் வெளியிட்ட ஜியோ திட்டங்களின் மிகவும் பிரபலமான திட்டங்களான 84 நாட்களுக்கு அளிக்கப்படும் 399 திட்டம் 459 ரூபாயாக மாற்றப்பட்டுள்ளது.
அதே கட்டணத்தில் வேண்டுமென்றால் 70 நாட்களுக்கான திட்டம் 399 ரூபாயில் கொடுக்கிறது ஜியோ.
வருவாய்
இதன் மூலம் ஜியோவின் மொத்த வருமானம் உயர்ந்தாலும், ஒரு வாடிக்கையாளர் மூலம் கிடைக்கும் சராசரி வருமானத்தின் அளவை அதிகளவில் பாதிக்கும் எனத் தெரிகிறது.
ஏர்டெல்
ஜியோவின் இந்தத் தொடர் கட்டண உயர்வின் மூலம் இதன் போட்டி நிறுவனமான ஏர்டெல்-க்கு மிகப்பெரிய சந்தை வாய்ப்பை அளிக்கும் எனத் தெரிகிறது.
இதன் காரணமாக ஜியோ தனது புதிய கட்டணத்தை வெளியிட்ட போது ஏர்டெல் நிறுவனத்தின் பங்குகள் பங்குச்சந்தையில் 10 வருட உயர்வை எட்டியது.
டாடா டெலிசர்வீசஸ்
அதேபோல் ஏர்டெல் டாடா டெலிசர்வீசஸ் நிறுவனம் குறித்த அறிவிப்பை வெளியிட்டதன் மூலம் 2017ஆம் ஆண்டில் ஏர்டெல் நிறுவனப் பங்குகள் 18 சதவீதம் வரையிலான உயர்வைச் சந்தித்தும்.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications