மத்திய அரசு பொதுத் துறை வங்கிகளுக்கு மறுமூலதனம் அளிக்க இருப்பதாக அறிவித்துள்ளது. இதனால் இரண்டு நாட்களாகப் பொதுத் துறை வங்கி பங்குகளில் முதலீடு செய்வது அதிகரித்து வருகின்றது.
பங்குச் சந்தையில் முதலீடு செய்வதில் ரிஸ்க் இருந்தாலும் பொதுத் துறை வங்கிகளின் பங்குகளைத் தற்போது வாங்கினால் நல்ல லாபம் கிடைக்கும். எனவே இங்கு வங்கித் துறையில் அதிக முதலீடுகளைச் செய்து வரும் 5 மியூச்சுவல் ஃபண்டுகள் பற்றி விளக்கமாகப் பார்ப்போம்.
ஐசிஐசிஐ புருடென்சியல் பேங்கிங் மற்றும் ஃபினான்சியல் சர்வீஸ் ஃபண்டு
ஐசிஐசிஐ புருடென்சியல் பேங்கிங் மற்றும் ஃபினான்சியல் சர்வீஸ் ஃபண்டு 9 வருட பழமையான ஒரு மியூச்சுவல் ஃபண்டு திட்டமாகும். இதனைடம் 2500 கோடி ரூபாய் மதிப்பிலான ஃபண்டுகள் உள்ளன. இத்திட்டத்தில் ஒரு வருடம் வரை முதலீடு செய்தவர்களுக்கு 28 சதவீதம் வரையிலும், மூன்று வருடம் வரை முதலீடு செய்தவர்களுக்கு 23 சதவீதம் வரையிலும், 5 வருடம் வரை முதலீடு செய்தவர்களுக்கு 24 சதவீதம் வரையிலும் லாபத்தினை அளித்துள்ளது.
ஆதித்யா பிர்லா சன் லைப் பேங்கிங் மற்றும் பினான்சியல் சர்வீசஸ் ஃபண்டு
டிசம்பர் 2013-ம் ஆண்டுத் துவங்கப்பட்ட இந்த ஃபண்டு திட்டம் 5 ஸ்டார் ரேட்டிங் கொண்டதாகும். சென்ற ஒரு ஆண்டு வரை இந்தத் திட்டத்தில் முதலீடு செய்தவர்களுக்கு 22 சதவீதம் வரையிலும், மூன்று ஆண்டு வரை முதலீடு செய்தவர்களுக்கு 24 சதவீதம் வரையிலும் லாபம் அளித்துள்ளது.
ரிலையன்ஸ் பேங்கிங் ஃபண்டு
இந்தியாவின் மிகவும் பழமையான மற்றும் பெரிய ஃபண்டு திட்டமாக இது உள்ளது. 2003-ம் ஆண்டு மே மாதம் துவங்கப்பட்ட இந்தத் திட்டத்தில் 1 வருடம் வரை முதலீடு செய்தவர்களுக்கு 27 சதவீதம் வரையிலும், மூன்று வருடம் வரை முதலீடு செய்தவர்களுக்கு 18 சதவீதமும், 5 வருடம் வரை முதலீடு செய்தவர்களுக்கு 19 சதவீதம் வரையிலும் லாபம் அளித்துள்ளது.
யூடிஐ பேங்கிங் செக்டார் ஃபண்டு
13 வருட பழமை வாய்ந்த இந்தத் திட்டத்தில் 1 வருடம் வரை முதலீடு செய்தவர்களுக்கு 24 சதவீதம் வரையிலும், மூன்று வருடம் வரை முதலீடு செய்தவர்களுக்கு 17 சதவீதம் வரையிலும், 5 வருடம் வரை முதலீடு செய்தவர்களுக்கு 16 சதவீதம் வரையிலும் லாபம் அளித்துள்ளது.
சுந்தரம் ஃபினாஷியல் சர்வீசஸ் ஆப்பர்ச்யூனிட்டிஸ் சண்டு
2015-ம் ஆண்டுத் துவங்கப்பட்ட இந்தத் திட்டம் மிகவும் உறுதியான லாபத்தினை அளித்து வந்துள்ளது. இத்திட்டத்தில் 1 வருடம் வரை முதலீடு செய்தவர்களுக்கு 19 சதவீதம் வரையிலும் 3 வருடம் வரை முதலீடு செய்தவர்களுக்கு மற்றும் 5 வருடம் வரை முதலீடு செய்தவர்களுக்கு 15 சதவீதம் வரையிலும் லாபம் அளித்துள்ளது.


Click it and Unblock the Notifications