இந்திய ரயில்வே துறைக்கு எப்போதும் தண்டவாளத்தை அளிக்கும் ஸ்டீல் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா நிறுவனத்தின் உற்பத்தி குறைந்துள்ள காரணத்தால், தற்போது வெளி நிறுவனங்களுக்கு டென்டரை அறிவித்துள்ளது.
பியூஷ் கோயல்
மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் இந்திய ரயில்வே துறையின் அடுத்தகட்ட விரிவாக்கப் பணிகளுக்காக 7,00,000 மெட்ரிக் டன் தண்டவாளங்களுக்கான டென்டரை வெளியிட்டுள்ளதாக மத்திய ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
ஜின்டால் ஸ்டீல் மற்றும் பவர்
இந்தியாவில் அரசு நிறுவனம் அல்லாத பெரிய ஸ்டீல் உற்பத்தி நிறுவனமான ஜின்டால் ஸ்டீல் மற்றும் பவர் நிறுவனம் இதன் மூலம் அதிகளவிலான நன்மையை அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரூ.8.6 லட்சம் கோடி
மத்திய அரசு இந்திய ரயில்வே வழித்தடங்களை விரிவாக்க சுமார் 8.6 லட்சம் கோடி ரூபாய் அளவிலான நிதியை ஒதுக்கியுள்ளது. இதன் வாயிலாக இந்திய ரயில்வே துறை தனது பணிகளைச் செய்து வருகிறது. தற்போது டென்டர் விடப்பட்டுள்ள 7,00,000 டன் தண்டவாளங்கள் கூட இத்திட்டத்தின் படியே நடக்கிறது.
தண்டவாளங்கள்
இந்திய ரயில்வே துறையிக்குத் தற்போது 1.5 கோடி டன் தண்டவாளங்கள் தேவைப்படுகிறது. அதில் அடுத்த 12 மாதத்தில் 8,00,000 டன் தேவைப்படும் எனவும் கணிப்புகள் வெளியாகியுள்ளது.
அதிகக் கடன்
ஜின்டால் ஸ்டீல் நிறுவனம் தற்போது அதிகக் கடன் நெருக்கடியில் இருப்பது மட்டும் அல்லாமல் தொடர்ந்து இரண்டு வருடங்களாக நஷ்டத்தை மட்டுமே சந்தித்து வருகிறது.
பெரிய வாய்ப்பு
இந்நிலையில் இத்திட்டத்தை ஜின்டால் ஸ்டீல் பெற்றால் இந்நிறுவனத்தின் வருவாய் மற்றும் லாபத்தை அதிகரிக்க இது மிகப்பெரிய வாய்ப்பாக அமையும் எனத் தெரிகிறது.


Click it and Unblock the Notifications