இந்தியாவின் முன்னணி கார் தயாரிப்பு மற்றும் விற்பனை நிறுவனமான மாருதி சுசூகி 15 காலாண்டுகளாகத் தொடர்ந்து லாபம் அடைந்து வரும் நிலையில், செப்டம்பர் காலாண்டிலும் கணிப்புகளைத் தாண்டி லாபத்தைப் பெற்றுள்ளது.
இதன் மூலம் இன்றைய பங்குச்சந்தை வர்த்தகத்தில் மாருதி சுசூகி நிறுவனத்தின் மீதான முதலீடு 1.41 சதவீதம் வரையில் உயர்ந்து ஒரு பங்கு விலை 8,190 ரூபாய்க்கு வர்த்தகம் செய்யப்படுகிறது.
லாபம்
மாருதி சுசூகி நிறுவனம் செப்டம்பர் காலாண்டில் 2,484 கோடி ரூபாய் அளவிலான லாபத்தை அடைந்துள்ளது, இது கடந்த வருடத்தை ஒப்பிடுகையில் 3 சதவீதம் அதிகமாகும். மேலும் சந்தை கணிப்புகள் மாகுதி சுசூகி 2,230 கோடி ரூபாய் லாபமாகப் பெறும் எனக் கூறப்பட்ட நிலையில் அனைத்தையும் தாண்டி அதிக லாபத்தைப் பெற்றுள்ள மாருதி சுசூகி.
வருவாய்
இக்காலகட்டத்தில் மாருதி சுசூகி நிறுவனத்தின் வருவாய் அளவீடுகள் 22 சதவீதம் வரையில் உயர்ந்து 21,768 கோடி ரூபாயாக உயர்ந்தது. ஆனால் கணிக்கப்பட்ட அளவான 22,000 கோடியை அடைய முடிவில்லை.
அதிகப்படியான உயர்வு
இன்றைய வர்த்தகத்தில் மாருதி சுசூகி நிறுவனம் 2 சதவீதம் வரையில் உயர்ந்து முதலீட்டாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
மேலும் 2017ஆம் ஆண்டு மும்பை பங்குச்சந்தையின் ஆட்டோ குறியீடு 25.3 சதவீதம் மட்டுமே உயர்ந்துள்ள நிலையில் மாருதி சுசூகி நிறுவனப் பங்குகள் சுமார் 53.8 சதவீதம் வரையில் இந்த வருடம் வளர்ச்சி அடைந்துள்ளது.
ஏற்றுமதி
இந்தியாவில் பல ஆட்டோமொபைல் நிறுவனங்கள் தற்போது கார்களைத் தயாரித்து இந்தியாவில் விற்பனை செய்வது மட்டுமல்லாமல், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்து வருகிறது.
நடப்பு நிதியாண்டின் முதல் 6 மாத காலத்தில் சுமார் 57,300 கார்களை ஏற்றுமதி செய்து மாருதி சுசூகி ஏற்றுமதியில் முதல் இடத்தைப் பிடித்துள்ளது. கடந்த நிதியாண்டில் 54,008 கார்களை மட்டுமே ஏற்றுமதி செய்திருந்தது.


Click it and Unblock the Notifications