உலக நாடுகளில் பல்வேறு பொருட்கள் ஏலம் விடப்படுகிறது குறிப்பாக ஓவியங்கள், பழங்கால பொருட்களுக்கு சந்தையில் மிகப்பெரிய விலைக்கொடுத்து வாங்க மக்கள் ஆர்வமாக உள்ளனர்.
பழங்கால பொருட்களில் முதலீடு செய்வதிலும் அதனை அடுத்த தலைமுறையினர் விற்பனை செய்து பல கோடிகளை சம்பாதிப்பது பெரும் பணக்காரர்கள் வழக்கமாக கொண்டுள்ளனர்.
பில் கேட்ஸ்
உதாரணமாக உலகின் முன்னணி மென்பொருள் நிறுவனமாக விளங்கும் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் நிறுவனரான பில் கேட்ஸ் வீட்டில் பழங்கால ஒவியங்களை வைப்பதற்காகவே மிகப்பெரிய அறை ஒன்று உள்ளதாம். மேலும் அவர் வீட்டில் ஒவ்வொரு மாதமும் ஓவியங்கள் மாற்றப்படுமாம் அந்த அளவிற்கு ஓவியத்தின் மேல் பில் கேட்ஸ்-க்கு ஈர்ப்பாம்.
சரி நாம விஷயத்திற்கு வருவோம்.
60களில் முன்னணி அமெரிக்க நடிகராக விளங்கி பால் நியூமென் பயன்படுத்திய ரோலக்ஸ் வாட்ச் சமீபத்தில் நியூயார்க் நகரத்தில் ஏலம் விடப்பட்டது.
116 கோடி ரூபாய்
இந்த வாட்ச் சுமார் 17.8 மில்லியன் டாலருக்கு ஏலம் விடப்பட்டுள்ளது. இது இந்திய ரூபாயின் மதிப்பில் சுமார் 116 கோடி ரூபாய். உலகளவில் இருக்கும் முன்னணி ஏல நிறுவனங்களில் இதுவரை இத்தகைய பெரும் தொகைக்கு ஒரு வாட்ச் ஏலம் போனது இதுவே முதல் முறையாகும்.
பிலிப்ஸ் அக்ஷன் ஹவுஸ்
ரோலக்ஸ் நிறுவனத்தின் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் டேடோனா வாட்ச் தான் தற்போது 116 கோடி ரூபாய்க்கு விலை போயுள்ளது.
12 நிமிடம்
இந்த ஏலம் வெறும் 12 நிமிடம் மட்டுமே நடத்தப்பட்ட நிலையில் வெறும் 1 மில்லியன் டாலருக்கு மட்டுமே ஏலம் துவங்கப்பட்டது. 15 மில்லியன் டாலர் வரையில் உயர்ந்த ஏல மதிப்பு கடைசி 5 நிமிடத்தில் இரண்டு பேருக்கு மத்தியில் நிலவிய கடும் போட்டியில் இந்த வாட்ச் 17.8 மில்லியன் டாலருக்கு விலைப்போய் உள்ளது.


Click it and Unblock the Notifications