நாட்டின் முன்னணி டெலிகாம் நிறுவனங்களான டாடா கம்யூனிகேஷன்ஸ் செப்டம்பர் 30 உடன் முடிந்த காலாண்டில் சுமார் 250 கோடி ரூபாய் அளவிலான நஷ்டத்தை அடைந்துள்ளது. இதில் அதிகப்படியான நஷ்டம் தனது கிளை வையர்லெஸ் சேவை அளிக்கும் நிறுவனமான டாடா டெலிசர்வீசஸ் நிறுவனத்தின் வாயிலாக பெற்றுள்ளது என் டாடா கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
தற்போது டாடா குழுமம் டாடா டெலிசர்வீசஸ் நிறுவனத்தை தான் ஏர்டெல் நிறுவனத்திற்கு முழுமையாக விற்பனை செய்துள்ளது. கடந்த நிதியாண்டின் இதே காலாண்டில் டாடா கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் 39.96 கோடி ரூபாயை வாபமாக பெற்றது குறிப்பிடத்தக்கது.

இக்காலாண்டில் இந்நிறுவனத்தின் வருவாய் 7.31 சதவீதம் குறைந்து 4,218 கோடி ரூபாய் அளவில் பெற்றுள்ளது. இது கடந்த நிதியாண்டில் 4,509 கோடி ரூபாயாக இருந்தது.
தற்போது டாடா டெலிகாம் நிறுவனம் சுமார் 40,000 கோடி ரூபாய் கடனில் உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கூடுதல் முதலீடு செய்து தற்போது போட்டி மிகுந்த டெலிகாம் சந்தையில் போட்டி போட முடியாது என முடிவு செய்து ஏர்டெல் நிறுவனத்திற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications