டெல்லி:ராணுவத்தினை நவீன மையமாக்கும் நோக்கத்தில் பழைய ஆய்தங்களை எல்லாம் மாற்றிவிட்டு மெஷின் கன், துப்பாக்கிகள், போர் கார்பைன்கள் போன்றவற்றை 40,000 கோடி முதலீட்டில் வாங்க இந்திய அரசு முடிவு செய்துள்ளது.
ஆயுதங்களை வாங்குவதற்காக அமைக்கப்பட்ட குழுவானது 44,000 மெஷின் கன், 44,6000 கார்பைன்கள் வாங்க முடிவு செய்துள்ளதாகவும் செய்தி வட்டாரங்கள் கூறுகின்றன.
சீனா மற்றும் பாகிஸ்தான்
உலகின் இரண்டாம் மிகப் பெரிய ராணுவத்தினை வைத்துள்ள இந்தியா சீனா மற்றும் பாக்கிஸ்தான் நாடுகளை எதிர்த்துப் போராடவே மிகவும் துரிதமாக ஆய்தம் வாங்க முடிவு செய்துள்ளது.
எல்எம்ஜி ஆயுதங்கள்
ஆய்தங்கள் வாங்குவது மட்டும் இல்லாமல் ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பிடமும் பல வகையான எல்எம்ஜி சிறிய ரக ஆய்தங்கள் தயாரிப்பது குறித்து விவாதித்து வருகின்றது.
எல்எம்ஜி துப்பாக்கிகளை வாங்குவதற்கான அனுமதியை ஒரு சில நாட்களில் வழங்கப்படும் என்றும், 7.62 கேலிபர் துப்பாக்கிகளை ஸ்கிராப் செய்துவிட்டு 10,000 எல்எம்ஜி துப்பாக்கிகளை வாங்க முடிவு செய்துள்ளது.
சோதனை தோல்வி
துப்பாக்கிச் சுடுதல் சோதனையில் மத்திய அரசின் கீழ் இயங்கி வரும் இஷாப்பூர் துப்பாக்கி நிறுவனம் தயாரித்த துப்பாக்கிகள் தோல்வி அடைந்ததை அடுத்து ராணுவம் இதனை வாங்குவதை நிராகரித்துள்ளது.
ஏற்படும் தாமதம்
ராணுவத்திற்கு 7 லட்சம் 7.62*21 எம்எம் துப்பாக்கிகள் தேவைப்படுகின்றது. ஒரு தயாரிப்பாளரிடம் மட்டும் ஆர்டர் கொடுத்தால் இவற்றை வாங்குவதில் தாமதம் ஏற்படும் என்று கூறப்படுகின்றது.
தாமதத்தினைத் தவிர்க்கலாம்
ஒரே ஒரு தயாரிப்பாளரிடமிருந்து ஆயுதங்களைக் கொள்முதல் செய்யாமல் ஒன்றுக்கு மேற்பட்ட தயாரிப்பாளர்களுக்கு ஆர்டர்களை அளிக்கலாம் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இதனால் தாமதமாக ஆயுதங்கள் வந்து சேருவது குறையும். பயிற்சிகளும் வேகமாக அளிக்க முடியும் என்றும் அதிகாரிகள் மத்திய அரசுக்குக் கோரிக்கை வைத்துள்ளனர்.
சிப்பாய்களுக்கான ஆயுதம்
சிப்பாய்களுக்கு வழங்கப்படும் ஆயுதங்களை நவீனமையாமாக்குவது என்பது ராணுவம் எடுத்துள்ள பெரிய முன்முயற்சியாகும். இதனால் சிப்பாய்களின் திறனைக் கணிசமாக உயர்த்த முடியும் என்று மூத்த ராணுவ அதிகாரி தெரிவித்தார்.
ராணுவத்தினை டியூன் செய்ய வேண்டும்
அன்மையில் நடந்த ராணுவ அதிகாரிகள் இடையிலான கூட்டத்தில் தற்போது வந்து கொண்டு இருக்கும் அத்துரத்தல்களில் இருந்து நாட்டைக் காப்பாற்ற ராணுவத்தினை டியூன் செய்ய வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.
அமைச்சர்
பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் அவர்கள் அன்மையில் நடந்த ஒரு கூட்டத்தில் இராணுவத்திற்கு ஆயுதங்களை வாங்கி நவீனமயமாக்குவதில் மத்திய அரசு முன்னுரிமை அளித்துள்ளது என்றும், மேலும் தற்போது உள்ள குறைகளை நீக்கி ராணுவத்தினை வலுப்படுத்தும் என்றும் தெரிவித்துள்ளார்.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!



Click it and Unblock the Notifications