சென்னை:தபால் நிலையம் கீழ் இயங்கி வரும் சிறு சேமிப்புக் கணக்குகளுக்குப் புதிய விதிகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. இதன் படி தேசிய சேமிப்புப் பத்திரம் மற்றும் பொது வருங்கால வைப்பு நிதி கணக்கு எனப்படும் பிபிஎப் திட்டங்களில் முதலீடு செய்து வந்து என்ஆர்ஐ ஆக உங்களது தற்போதைய நிலை இருந்தால் முதிர்வு காலத்திற்கு முன்பே உங்கள் கணக்கு மூடப்படும்.
இதற்கான அரசாணையினை மத்திய அரசு அக்டோபர் மாத துவக்கத்தில் வெளியிட்டுள்ளது.
பிபிஎப்
பிபிஎப் திட்டத்திற்கான திருத்த சட்டம் 1968-ன் கீழ் இந்தியாவில் உள்ள தனிநபர் ஒருவர் சிறு சேமிப்புத் திட்டங்களில் முதலீடு செய்து வந்து முதிர்வு காலத்திற்கு முன்பே என்ஆர்ஐ ஆக மாறினால் எப்போது என்ஆர்ஐ நிலைக்கு வந்தீர்களோ அப்போது முதல் முதலீடு செய்ய முடியாது.
பிபிஎப் வட்டி விகிதம்
கணக்கு முட்டப்பட்டது வரையிலான வட்டி விகிதத்தினைப் பெறலாம், அதில் எந்த மாற்றமும் இல்லை. தற்போது 7.8 சதவீத வட்டி விகிதம் அளிக்கப்படுகின்றது.
தேசிய சேமிப்புப் பத்திரம்
தேசிய சேமிப்புப் பத்திரத்தில் முதலீடு செய்துள்ளவர்களுக்குத் தனியாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதன் அடிப்படையில் பத்திரமாக உங்கள் முதலீடுகள் அனைத்தும் நீங்கள் என்ஆர்ஐ நிலைக்கு மாறிய உடன் அவை பணமாக மாறிவிடும். வட்டி விகிதம் எப்போது கணக்கு மூடப்பட்டதோ அப்போது வரை கிடைக்கும்.
முதலீடு திட்டங்கள்
தேசிய சேமிப்புப் பத்திரம், பொது வருங்கால வைப்பு நிதி, மாதாந்திர வருவாய் திட்டம் மற்றும் தபால் நிலயங்களில் உள்ள பிற சேமிப்புத் திட்டங்களில் டெபாசிட் செய்து வந்திருந்தால் அவற்றைத் தொடர முடியாது.
தெளிவாக விவரங்கள் இல்லை
மத்திய அரசின் இந்தத் திருத்த சட்டம் குறித்து முதலீட்டார்களுக்கான வல்லுநர்களிடம் கேட்கப்பட்ட கேள்விக்குத் தபால் நிலயங்களில் உள்ள சேமிப்புத் திட்டங்கள் குறித்த என்ஆர்ஐ களின் முதலீடு பற்றித் தெளிவான தகவல் ஏதும் இல்லை என்று கூறுகின்றனர்.
சிறு சேமிப்புத் திட்டம்
சென்ற மாதம் சிறு சேமிப்புத் திட்டங்கள் மீதான இந்தக் காலாண்டிற்கான வட்டி விகிதத்தில் மாற்றம் ஏதும் இல்லை. பிபிஎப் திட்டத்திற்கு 7.8 சதவீத வட்டி விகித லாபத்தினை அளிக்கின்றது.
More From GoodReturns

இந்த வாரம் 4 நாட்கள், அடுத்த வாரம் 3 நாட்கள்: பங்குச்சந்தை முதலீட்டாளர்களே முதல்ல இத படிங்க

பங்குச்சந்தை சரிவில் இந்த தப்பு மட்டும் பண்ணாதீங்க - முதலீட்டாளர்களுக்கு விஜய் கேடியா கூறும் டிப்ஸ்

எஸ்பிஐ-யின் மெகா பிளான்: மாதம் ரூ.11,000 கியாரண்டி வருமானம்! முதலீடு எவ்வளவு தெரியுமா?

பங்குச்சந்தைய விடுங்க பிட்காயின் முதலீட்டாளர்கள் நிலைமை இன்னும் மோசம்..! ஈரான் போர் யாரையும் விட்டு வைக்கல..!

கதறி கதறி அழும் வெள்ளி முதலீட்டாளர்கள்.. போட்ட காசு மொத்தமும் போச்சு..!! அடுத்தது என்ன..?

SIP முதலீடு செஞ்சா கோடிகளில் பணம் கிடைக்குமா? நம்ம எல்லாரும் செய்யுற தப்பு இது தான்..!!

செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் வட்டி உயர்த்தப்படுகிறதா? மக்களவையில் முக்கிய தகவலை வெளியிட்ட அரசு…!!

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!



Click it and Unblock the Notifications