இந்தியாவின் மிகப் பெரிய தனியார் தொலைத்தொடர்பு நிறுவனமான பார்தி ஏர்டெல் திங்கட்கிழமை உள்நாட்டு மொபைல் தயாரிப்பு நிறுவனமான செல்காம் உடன் இணைந்து 1,349 ரூபாய்க்கு 4ஜி ஸ்மார்ட்போன் வெளியிட ஒப்பந்தம் போட்டுள்ளது.
ஜியோவின் 4ஜி பியூச்சர் போனுக்குப் போட்டியாக ஸ்மார்ட்போன் வெளியிட ஆகஸ்ட் மாதம் முதல் திட்டம் திட்டி வந்த ஏர்டெல் நிறுவனத்தின் இந்த அறிவிப்பு ஜியோவை அதிர்ச்சிக்குள் ஆக்கியுள்ளது.
செல்கான்
செல்கான் நிறுவனத்திற்குத் தென் இந்தியாவில் ஏற்கனவே நல்ல வர வேர்ப்பு உள்ள நிலையில் ஏர்டெல் நிறுவனத்துடன் இணைந்துள்ளதால் மிகப் பெரிய அளவில் மக்களிடையே சென்று அடையும் என்று எதிர்பார்க்கின்றது.
சரி, ஏர்டெல் நிறுவனத்தின் இந்தப் போனை 1,349 ரூபாயில் எப்படிப் பயன்படுத்துவது என்று இங்குப் பார்ப்போம்.
டவுன் பேமெண்ட்
வாடிக்கையாளர்கள் முதலில் 2,849 ரூபாய் கொடுத்து 4ஜி ஸ்மார்ட்போனை வாங்க வேண்டும். ஜியோவின் 4ஜி பியூச்சர் போன்று இல்லாமல் இந்தப் போனில் அனைத்துச் செயலிகளையும் நிறுவலாம் என்பது சிறப்பு.
1349 ரூபாய் ஆஃபர் எப்படி
ஸ்மார்ட்போனை 2,849 ரூபாய் விலை கொடுத்து வங்கிய பிறகு 18 மாதங்கள் பயன்படுத்தினால் 500 ரூபாய் ஏர்டெல் வாலெட்டில் கிடைக்கும். இதுவே 36 மாதங்கள் வரை பயன்படுத்தினால் 1,000 ரூபாய் கிடைக்கும்.
ரீசார்ஜ் செய்யவில்லை என்றால்
169 ரூபாய் ரீசார்ஜ் செய்யவில்லை என்றால் வாடிக்கையாளர்கள் தங்களுக்கு ஏற்றப் பிற ரீசார்ஜ்களைச் செய்து பயன்படுத்தலாம்.
ஸ்மார்ட்போன்
செல்கான் நிறுவனம் தயாரித்து வழங்க இருக்கும் இந்த ஸ்மார்ட்போன் 4 இன்சி டெஸ்பிளே, இரட்டை சிம் மற்றும் எப்எம் ரேடியோவுடன் அனைத்துச் செயலிகளையும் நிறுவக் கூடியதாக இருக்கும்.
டீபால்ட் ஆப்
மேலும் இந்த ஸ்மார்ட்போனில் மை ஏர்டெல் செயலி, விங்க் மியூசிக், ஏர்டெல் டிவி போன்ற வற்றைப் பயன்படுத்தி வாடிக்கையாளர்கள் மகிழலாம். இவை அனைத்தும் பண்டில் ஆஃபராக 169 ரூபாய் ரீசார்ஜ் பேக்கில் கிடைக்கும்.
வோடாபோன்
ஜியோவிற்குப் போட்டியாக வோடாபோன் நிறுவனமும் இதேப்போன்று சென்ற வாரம் 999 ரூபாய்க்கு 4ஜி ஸ்மார்ட்போன் திட்டத்தினை வெளியிட்டுள்ளது.
ஜியோ போன்
வோடாபோன் மற்றும் ஏர்டெல் நிறுவனத்தின் இந்தப் போன் திட்டத்தினைப் பார்த்து அதிர்ந்துப்போன ஜியோ பியூச்சர் போன் உற்பத்தியினை நிறுத்திவிட்டு ஸ்மார்ட் போன் தயாரிப்பில் இறங்கியுள்ளது.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications