இந்திய ரயில்வே நிர்வாகம் அடுத்த 5 வருடத்தில் 15,000 கோடி ரூபாயினை முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளதாகவும், இதனால் கூடுதல் 10 நபர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்றும் மத்திய மைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார்.
சென்ற ஆகஸ்ட் மாதம் அமைச்சரவை மாற்றி அமைக்கப்பட்ட போது பியூஷ் கோயல் அவர்கள் ரயிவே துறை அமைச்சராகப் பொறுப்பேற்றார், மேலும் தேசிய போக்குவரத்துத் துறையினைப் புதிய பாதையில் கொண்டு செல்வேன் என்று உறுதி அளித்திருந்தார்.
முதலீடு
அடுத்து வர உள்ள 5 ஆண்டுகளில் ரயில்வே 15,000 கோடி ரூபாயினை முதலீடு செய்ய உள்ளது.அ தன் மூலம் 10 லட்சம் நபர்களுக்கும் அதிகமாக ரயில்வே துறையில் வேலை வாய்ப்பு கிடைக்கும் என்று அவர் கூறினார்.
ரயில்வேயின் நோக்கம்
மக்களுக்குப் பாதுகாப்பான, வசதியான பயணங்களை அளிப்பது ரயில்வேயின் முக்கிய நோக்கம் என்று ஆங்கில நாளிதழின் விழா ஒன்றில் பியூஷ் கோயல் தெரிவித்தார்.
மின்சார ரயில் பாதை அமைக்கும் பணிகள்
இந்திய ரயில்வேயின் உள்கட்டமைப்பை உயர்த்துவதால் உள்ளூர் உற்பத்தியாளர்கள் அதிகம் பயனடைவார்கள். ரயில் தடங்களை அடுத்த 10 வருடத்திற்குள் முழுமையாக மின்சாரப் பாதையாக மாற்ற இருந்த திட்டத்தினை 4 வருடத்திற்குள் முடிக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் இதனால் நட்டம் அளித்து வந்த ரயில்வே நிர்வாகத்தால் 30 சதவீதம் வரை சேமிக்க முடியும் என்று அவர் கூறினார்.
10,000 கோடி சேமிக்க முடியும்
ரயில் பாதையினை முழுமையாக மின்சாரப் பாதையாக மாற்றுவதினால் ஒரு ஆண்டுக்கு 10,000 கோடி ரூபாய் வரை ரயில்வே நிர்வாகத்திற்கு எரிபொருள் கட்டணம் குறையும்.
வேலைவாய்ப்பு
ஒரு மாதத்திற்கு முன்பு ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல் 12 மாதத்தில் 10 லட்சம் வேலை வாய்ப்புகள் கிடைக்கும் என்று தெரிவித்து இருந்தார்.
சுரேஷ் பிரபு
2015-ம் ஆண்டு மத்திய ரயில்வே துறை அமைச்சராக இருந்த சுரேஷ் பிரபு ரயில்வே நிர்வாகத்திற்கு அடுத்த 5 ஆண்டில் 8.5 டிரில்லியன் ரூபாய் முதலீடு வரை தேவைப்படுகின்றது என்று தெரிவித்தது மட்டும் இல்லாமல் நேரடி வெளிநாட்டு முதலீடுகளுக்கும் அழைப்பு விடுத்து இருந்தார்.
எல்ஐசி
மேலும் எல்ஐசி நிறுவனத்திடம் இருந்து 1.5 டிரில்லியன் ரூபாய் மதிப்புள்ள டெபெட் ஃபண்டுகளை ரயில்வே திட்டங்களுக்காகப் பெற் இருப்பதாகக் கூரி இருந்தார். பியூஷ் கோயல் அவர்களின் திட்டத்திற்கும் சுரேஷ் பிரபு அவர்களின் திட்டமும் ஒன்றுதானா என்பது மட்டும் தெரியவில்லை.
More From GoodReturns

பங்குச்சந்தை சரிவில் இந்த தப்பு மட்டும் பண்ணாதீங்க - முதலீட்டாளர்களுக்கு விஜய் கேடியா கூறும் டிப்ஸ்

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?



Click it and Unblock the Notifications