மத்திய அரசு நேற்று ஜூலை மாதத்திற்கான ஜிஎஸ்டிஆர்-2ஐ தாக்கல் செய்ய நவம்பர் 30 கடைசித் தேதி என்றும், ஜிஎஸ்டிஆர்-3ஐ தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை டிசம்பர் 11 என்று நீட்டிப்புச் செய்து அறிவித்துள்ளது.
ஜிஎஸ்டிஆர் - 2 படிவம் என்பது கொள்முதல் செய்த விவரங்கள் பற்றித் தாக்கல் செய்வது ஆகும். இது விற்பனை விவரங்கள் தாக்கல் செய்த ஜிஎஸ்டிஆர்-1 உடன் ஒத்துப்போக வேண்டும்.
பழைய தேதி
முன்பு ஜிஎஸ்டிஆர் - 2 தாக்கல் செய்வதற்கான கடைசித் தேதி அக்டோபர் 31 ஆக இருந்தது. ஜிஎஸ்டிஆர் - 1 மற்றும் ஜிஎஸ்டிஆர் - 2 விவரங்கள் இரண்டு ஒப்புத்துப்போகிறதா என்று தாக்கல் செய்ய வேண்டிய ஜிஎஸ்டிஆர் - 3க்கான கடைசித் தேதி நவம்பர் 11 ஆக இருந்தது.
ஜிஎஸ்டிஆர் -1
ஜூலை மாதத்திற்கான ஜிஎஸ்டிஆர் - 1ஐ தாக்கல் செய்வதற்கான கடைசித் தேதி அக்டோபர் 1 வரை நீட்டிக்கப்பட்டு இருந்தது. இதனால்; 30.81 லட்சம் வரி செலுத்துனர்கள் அதிகரித்துள்ளதாகவும் நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஜிஎஸ்டிஆர் -2
ஜூலை மாதத்திற்கான ஜிஎஸ்டிஆர்-2 தாக்கல் செய்வதற்கான காலக்கெடு நீட்டிப்பிற்கான அனுமதியினை மத்திய அரசு அளித்துளது. ஜிஎஸ்டி தளத்தில் ஜிஎஸ்டிஆர்-2 தகவல்கள் சரியாக ஒத்துப்போகுவதில்லை என்ற புகாரும் எழுந்துள்ளது.
எதனால் காலக்கெடு நீட்டிப்பு
முதல் மாதம் ஜிஎஸ்டிஆர் - 2 படிவத்தினைத் தாக்கல் செய்ய உள்ளதால் தான் இந்தக் காலக்கெடு நீட்டிப்பு அளிக்கப்பட்டுள்ளது. இதனால் ஜிஎஸ்டி தளம் கொஞ்சம் வேகமாக இயங்கும்.
இன்ஃபோசிஸ்
சென்ற வாரம் இன்ஃபோசிஸ் நிறுவனத்திடம் ஜிஎஸ்டிஎன் தளத்தினை வேகப்படுத்துமாறு பீகார் மாநிலத்தின் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி கோரிக்கை வைத்ததை அடுத்து இதற்கான பணிகளும் நடைபெற்று வருகின்றது.
தாக்கல் செய்தவர்கள் எண்ணிக்கை
ஜூலை மாதத்திற்கான ஜிஎஸ்டிஆர் - 2 தாக்கலினை சென்ற வாரம் சனிக்கிழமை வரை 12 லட்சம் வணிகர்கள் செய்துள்ளனர்.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications