மானியம் விலையில் அளிக்கப்படும் சிலிண்டர் விலை ஒன்றுக்குப் புதன்கிழமை முதல் அதாவது 2017 நவம்பர் 1 முதல் 4.6 ரூபாய் விலை உயர்ந்துள்ளது.
அதனால் 14.2 கிலோ அளவிலான சிலிண்டர் விலை சென்னையில் 483.69 ரூபாய் எனவும், டெல்லி 496.69 ரூபாய் எனவும், கொல்கத்தாவில் 498.43 ரூபாய் எனவும், மும்பையில் 498.38 ரூபாய் எனவும் உயர்ந்துள்ளது.
மானியம் இல்லா சிலிண்டர்
மானியம் இல்லா சிலிண்டர் விலை 93 ரூபாய் முதல் 94 ரூபாய் வரை விலை உயர்ந்துள்ளது. இதனால் சென்னையில் 750 ரூபாய், டெல்லி 742 ரூபாய், கொல்கத்தா 759.5 ரூபாய், மும்பை 718.5 ரூபாய் எனவும் உயர்ந்துள்ளது.
எதனால் விலை உயர்வு?
உலகச் சந்தையில் எண்ணெய் விலை உயர்ந்ததால் இந்திய எண்ணெய் நிறுவனங்களும் எல்பிஜி விலையினை உயர்த்தியுள்ளன.
மானிய சிலிண்டர் விலை உயர்வு ஏன்?
சில மாதங்களுக்கு முன்பு மானிய விலையில் வழங்கப்படும் சிலிண்டர்களுக்கு உள்ள மானியத்தினை மாதம் 4 ரூபாய் வரை குறைக்க உள்ளதாக அறிவித்து இருந்தது. ஒவ்வொரு வீட்டிற்கும் மாநில விலையில் ஆண்டுக்கு 12 சிலிண்டர் வரை அளிக்கப்படுகின்றது. ஆனால் இந்த மானியம் 2018 மார்ச் மாதம் வரை தான் கிடைக்கும்.
பிரதான் மந்திரி உஜாலா யோஜனா
இந்தியாவில் மொத்தம் 18.11 கோடி வாடிக்கையாளர்கள் மானிய விலையில் எல்பிஜி சிலிண்டர்களைப் பயனப்டுத்தி வருகின்றனர். அதில் 2.5 கோடி இணைப்புகள் ஏழை பெண்களுக்காகப் பிரதான் மந்திரி உஜாலா யோஜனா திட்டம் கீழ் வழங்கப்பட்டது. இவை மட்டும் இல்லாமல் 2.66 கோடி நபர்கள் மானியம் இல்லா சிலிண்டரை பயன்படுத்தி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications