ஓசூர்: டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் செப்டம்பர் மாதத்துடன் முடிவடைந்த 2017-2018 நிதி ஆண்டின் இரண்டாம் காலாண்டு அறிக்கையில் 20.2 சதவீதம் வரை நிகர லாபம் உயர்ந்து 213.16 கோடியைப் பெற்றுள்ளதாக அறிவித்துள்ளது.
சென்ற ஆண்டுடன் ஒப்பிடும் போது 177.39 கோடி ரூபாய் நிகர லாபத்தினைக் கூடுதலாக டிவிஎஸ் நிறுவனம் பெற்றுள்ளது.
வருவாய்
2016-ம் நிதி ஆண்டில் 3,465.69 கோடி வருவாயினைப் பெற்ற டிவிஎஸ் நிறுவனம் 4,097.99 கோடி ரூபாய் வருவாயினைப் பெற்றுள்ளது.
மோட்டார் சைக்கிள்
சென்ற நிதி ஆண்டின் இரண்டாம் காலாண்டில் 3.32 லட்சம் மோட்டார் சைக்கிளை விற்றது. ஆனால் 2017-2018 நிதி ஆண்டில் 9.9 சதவீதம் உயர்வுடன் 3.65 லட்சம் வாகனங்களை விற்றுள்ளது.
ஸ்கூட்டர் விற்பனை
சென்ற ஆண்டு 2.29 லட்சம் ஸ்கூட்டர் விற்ற டிவிஎஸ் நிறுவனம் இந்த ஆண்டின் இரண்டாம் காலாண்டில் 3.28 லட்சம் வாகனங்களை விற்றுள்ளது.
மூன்று சக்கர வாகனங்கள்
2016 நிதி ஆண்டில் 1.12 லட்சம் வாகனங்களை விற்ற டிவிஎஸ் 2017 நிதி ஆண்டில் 1.48 லட்சம் வாகனங்களை விற்றுள்ளது.
விற்பனை
மூன்று மாதங்களில் மட்டும் 9.23 லட்சம் வாகனங்களை விற்றுள்ளதாகவும் இது சென்ற ஆண்டுடன் ஒப்பிடும் போது 16.1 சதவீத உயர்வு ஆகும்.
பங்குச் சந்தை
இரண்டாம் காலாண்டு அறிக்கையினை டிவிஏஸ் நிறுவனம் நேற்று வெளியிட்ட பிறகு 1.96 சதவீதம் சரிந்து 709.15 ரூபாய் ஒரு பங்கு என வர்த்தகம் செய்யப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications