விரைவில் வாட்ஸ் ஆப் நிறுவனம் தங்களது செயலியில் யூபிஐ மூலமாக பண பரிமாற்றம் செய்யும் வசதியினை அறிமுகம் செய்ய உள்ளது. மெஸ்சேஜ் செய்வது மட்டும் இல்லாமல் இனி பணமும் செலுத்தலாம் என வாட்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
பேஸ்புக் நிறுவனத்தின் கீழ் இயங்கி வரும் வாட்ஸ் ஆப் நிறுவனம் அன்மையில் புதிதாக இரண்டு பிரபல வசதிகளை அளித்தது மட்டும் இல்லாமல் டிசம்பர் மாதம் முதல் பண பரிமாற்ற சேவை அளிக்க உள்ள தகவல்கள் நீண்ட நாட்களாக வெளிவந்துக்கொண்டு இருந்தது.
பே சேவை
வாட்ஸ்ஆப் செயலி பயனப்டுத்துபவர்கள் வாட்ஸ் ஆப் தொடர்புகளில் உள்ள அனைவருக்கும் எளிதாக பணத்தினை அனுப்ப முடியும், மேலும் இத்திட்டம் குறித்து பல வதந்திகள் பரவி வந்த நிலையில் ‘பே' புதிய சேவையினை இந்தியாவில் அறிமுகம் செய்கின்றது.
புதுப்பித்தல்
2017 டிசம்பர் மாதம் பண பரிவர்த்தனை சேவைக்கான பணிகள் முடிவடைந்து விடும் அதன் பிறகு வாட்ஸ் ஆப் பயணர்கள் புதுப்பித்தலை நிறுவினால் பே சேவையினை பயன்படுத்தி பரிவர்த்தனை செய்யலாம்.
பீட்டா சேவை
முதலில் பீட்டா வாட்ஸ் ஆப் பே சேவை நவம்பர் முதலும் பின்னர் டிசம்பர் முதல் முழு சேவையும் வழங்கப்படும் என்று கூறிவரும் நிலையில் அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் இது குறித்து வெளிவரவில்லை. ஆனால் 200 மில்லியன் பயணர்களை கொண்ட வாட்ஸ் ஆப் இந்த சேவையினை அளிக்கும் போது யூபிஐ பரிவர்த்தனைகள் அதிகரிக்கும் என்பது மட்டும் நிச்சயம்.
வங்கிகளுடன் பேச்சுவார்த்தை
அன்மையில் வாட்ஸ் ஆப் நிறுவனம் எஸ்பிஐ, ஐசிஐசிஐ மற்றும் எச்டிஎப்சி உள்ளிட்ட நிறுவனங்களிடம் பண பரிவர்த்தனை சேவை குறித்து விவாதித்து வந்தது குறிப்பிடத்தக்கது.
வாட்ஸ் ஆப்பில் பே சேவை எப்படி இருக்கும்?
வாட்ஸ் ஆப் செயலியில் உள்ள இணைப்பு பொத்தனை அழுத்தினால் ஒரு ரூபாய் வடிவில் பே பொத்தான் இருக்கும். அதனை தட்டி எவ்வளவு பணம் அனுப்ப வேண்டும், யாருக்கு அனுப்ப வேண்டும் என்ற விவரங்களை அளித்துவிட்டு பின் எண்ணை அழுத்தால் பணம் எளிதாக சென்று விடும்.
ஆனால் இந்த சேவை இப்படி தான் வரும் என்ற விவரங்கள் தெரியவில்லை. நமக்கு வந்த தகவலை வைத்து அளிக்கப்பட்ட விவரங்களே இவை ஆகும்.


Click it and Unblock the Notifications