வீட்டு கடன், வாகன கடன் மீதான வட்டியை 0.05% குறைத்தது எஸ்பிஐ!
இந்தியாவின் மிகப் பெரிய பொதுத் துறை வங்கி நிறுவனமான எஸ்பிஐ கடன் வழங்கு பெறுவதை ஊக்குவிக்கும் நோக்கில் சில்லறை கடன் மீதான வட்டி விகிதத்தினைக் குறைத்துள்ளது.
எஸ்பிஐ வங்கி வீட்டுக் கடன் மீதான வட்டி விகிதத்தினை 0.05 சதவீதம் குறைத்து ஆண்டுக்கு 8.30 சதவீத வட்டி விகிதத்தில் கடன் அளிக்க முடிவு செய்துள்ளது. இதற்கு முன்பு இதுவே 8.35 சதவீதத்தில் வீட்டுக் கடன் அளித்து வந்தது குறிப்பிடத்தக்கது.

வாகன கடன் மீதான வட்டியை 9.25 சதவீதத்தில் இருந்து 9.20 சதவீதமாகக் குறைத்துள்ளது.
இன்று காலை பங்குச் சந்தை துவங்கிய போது 1.02 சதவீதம் சரிவில் இருந்த எஸ்பிஐ பங்குகளின் நிலை 11:20 மணி நிலவரத்தின் படி 2.75 சதவீதம் உயர்ந்து வர்த்தகம் செய்யப்பட்டு வருகின்றது.


Click it and Unblock the Notifications