இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாகி அதிகாரி இவராகவும் இருக்கலாம்..!

பெங்களூரு: இன்போசிஸ் நிறுவனத்தினை விட்டு விஷால் சிக்கா வெளியேறியதை அடுத்து முன்னால் தலைமை ஊழியரான அசோக் வெமுரிக்குத் தலைமை நிர்வாக அதிகாரி பதவியை அளிக்கலாம் என்றும் கூறப்படுகின்றது.

இடைக்காலத் தலைமை செயல் அதிகாரியாக நந்தன் நீலகேனி இருந்தாலும் இவரால் எந்த ஒரு தனிப்பட்ட முடிவுகளையும் எடுக்க முடியாது.

நாமினேஷன்

நாமினேஷன்

சென்ற இரண்டு வாரங்களாக இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் அடுத்தத் தலைமை நிர்வாக அதிகாரி யார் என்பதற்கான நாமிஷன் பணிகள் எகோன் ஜெஹென்டர் உடன் நடைபெற்று வருகின்றது. அதில் ஜெராக்ஸ் நிறுவனத்தின் தற்போதைய தலைமை செயல் அதிகாரியாக உள்ள அசோக் வெமுரிக்கு அளிக்கலாம் என்ற திட்டத்தில் இருப்பதாகவும் கூறப்படுகின்றது.

அசோக் வெமுரி

அசோக் வெமுரி

அசோக் வெமுரி அவர்கள் முன்பு ஐகேட் கார்ப்ரேஷனின் தலைவராக இருந்தார். தற்போது அந்த நிறுவனத்தினைக் கேப்ஜெமினியின் கீழ் உள்ளது.

 பேச்சுவார்த்தை

பேச்சுவார்த்தை

இன்ஃபோஸிஸ் நிறுவனத்தில் இது குறித்த பேச்சுவார்த்தைகள் துவக்க நிலையில் தான் உள்ளது என்று கூறுகின்றனர். இன்ஃபோஸிஸ் நிறுவனம் இது குறித்து வெமுரிக்கு தெரிவித்துள்ள போதிலும் அவர் இதற்கான மனநிலையில் இப்போது இல்லை கூறப்படுகிறது. இது குறித்த மின்னஞ்சல் கேள்விக்கு எகோன் ஜெஹென்டர் பதில் தெரிவிக்க மறுத்துவிட்டார்.

சாதகமான அம்சங்கள்

சாதகமான அம்சங்கள்

அசோக் வெமுரி அவர்கள் இன்ஃபோஸ் நிறுவனத்தில் ஏற்கனவே அமெரிக்கக் கிளையினை நிர்வகித்து 2 பில்லியன் டாலர் மதிப்பிலான வணிகத்தினைப் பெற்றுத் தந்துள்ளார். இருந்து ஐகேட் நிறுவனத்தின் தலைவர்களின் வேண்டுகோளுக்கு இணங்கவே நிறுவனத்தினை விட்டு வெளியேறினார். பின்னர் 2015-ம் ஆண்டு ஐகேட் நிறுவனத்தினைக் கேப்ஜெமினி நிறுவனம் 4 பில்லியன் டாலர் மதிப்பில் கையகப்படுத்துவிட்டது.

இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் முக்கிய அமெரிக்க வாடிக்கையாளர்களுடன் நெமுரிக்கு நல்லுறவு உண்டு. இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் கணக்குகள் குறைந்து வரும் நேரத்தில் இவரது வருகையானது பெறும் சாதகமாக நிறுவனத்திற்கு இருக்கும் என்று நேரடியாக விவரம் அறிந்த ஒருவர் நம்முடன் பகிர்ந்துகொண்டார்.

 

நந்தன் நீலகேனி

நந்தன் நீலகேனி

வெமுரி ஒப்புக்கொண்டால் சிக்கா மற்றும் நாராயணமூர்த்தி இடையில் நடந்தது போன்று பிரச்சனைகள் வரலாம் என்றும் கூறுகின்றனர். சிக்கா மற்றும் நாராயணமூர்த்தி இடையில் நடந்த கருத்து வேறுபாடுகளால் தான் சிக்கா வெளியேறினார் என்றும் நந்தன் நீலகேனியை உடனே அதிகாரம் இல்லாத இடைக்காலத் தலைமை நிர்வாகியாகப் போர்டு குழு நியமித்தது.

நாராயண மூர்த்தி

நாராயண மூர்த்தி

புதிதாக இன்ஃபோசிஸ் நிறுவனத்திற்கு வரும் தலைமை செயல் அதிகாரியானவர் நாராயண மூர்த்தி அவர்களை எப்படிச் சமாளித்துச் செல்கிறார்கள் என்பதைப் பொறுத்தே பிரச்சனைகள் இல்லாமல் இருக்க முடியும்.

நிறுவனர்கள் தலையீடு

நிறுவனர்கள் தலையீடு

புதிதாக இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் யார் தலைமை செயல் நிர்வாகப் பதவிக்கு வந்தாலும் அதில் இணை நிறுவனர்களின் தலையீடு இல்லாமல் இருக்காது என்று ஹெட் ஹண்டர்ஸ் இந்தியா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான கிரிஷ் லக்‌ஷ்மிகாந்த் கூறுகிறார்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+