இந்தியாவின் முன்னணி டெலிகாம் சேவை அளிக்கும் நிறுவனமான பார்தி ஏர்டெல் அடுத்த 3-4 வருடத்தில் தனது 3ஜி சேவையை முழுமையாக மூடிவிட முடிவு செய்துள்ளதாக இந்நிறுவனத்தின் உயர் அதிகாரி தெரிவித்துள்ளார்.
ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் தனது வாய்ஸ் கால் சேவையை டிசம்பர் 1 முதல் நிறுத்துவதாக டிராய் வெளியிட்டுள்ள அறிவிப்பு மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், ஏர்டெல் நிறுவனத்தின் இந்த முடிவு வெளியாகியுள்ளது.
கோபால் விட்டல்
எங்களுக்கு 3ஜி சேவையில் எவ்விதமான முதலீடும் செய்ய விருப்பமில்லை. காரணம் இந்தியாவில் 2ஜி சேவையை விடவும் 3ஜி சேவையின் கிழ் இருக்கும் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகளவில் குறைந்து வருகிறது. இதன் காரணமாக அடுத்த 3-4 வருடத்தில் 3ஜி சேவைகள் முழுமையாக நிறுத்தப்படும்.
மேலும் இந்தியாவில் விற்பனையாகும் 50 சதவீத போன்கள் பியூச்சர் போன்களாகவே இருப்பதால் 2ஜி சேவையின் வாடிக்கையாளர் எண்ணிக்கை விரைவாகக் குறைய வாய்ப்புகள் இல்லை எனப் பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் இந்தியா மற்றும் தென் ஆசியாவில் நிர்வாக இயக்குநர் மற்றும் சிஇஓ கோபால் விட்டல் இதைத் தெரிவித்துள்ளார்.
டேட்டா கொள்ளவு
தற்போது ஏர்டெல் நிறுவன நெட்வொர்கில் 4ஜி சேவையில் அதிக டேட்டா கொள்ளவை உருவாக்கும் பணியில் உள்ளோம்.
இதன் ஒரு பகுதியாக 3ஜி சேவைக்காகப் பயன்படுத்தும் 2100 மெகாஹெட்ஸ் அலைக்கற்றை 4ஜி சேவைக்காகப் பயன்படுத்தும் வகையில் உருமாற்றத் திட்டமிடப்பட்டுள்ளது.
மென்பொருள் மாற்று...
3ஜி அலைக்கற்றில் மென்பொருள் உதவியுடன் சில மாற்றம் செய்வதன் மூலம் கூடுதல் அளவீட்டு உடன் அதனை 4ஜி அலைக்கற்றைக்கு இணையாகப் பயன்படுத்த முடியும். இதன் மூலம் அடுத்தச் சில வருடத்தில் ஏர்டெல் நிறுவனத்தின் சொந்தமான அலைக்கற்றைகள் அதிகளவில் 4ஜி சேவைக்காகப் பயன்படுத்த உள்ளது எனக் கோபால் விட்டல் தெரிவித்தார்.
மேம்பாடு
இந்தியாவில் பல இடங்களில் தற்போது ஏர்டெல் நிறுவனம் 4ஜி சேவையைப் பயன்படுத்த கூடிய 3ஜி உபகரணங்களை மாற்றி வருகிறது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications