தினந்தோறும் மாற்றம்.. குழப்பத்தில் மூழ்கியுள்ள இந்திய டெலிகாம் நிறுவனங்கள்..!

ஸ்மார்ட்போன் பயன்பாடு மட்டும் அல்லாமல் டெலிகாம் சேவையிலும் உலகளவில் இந்தியா முன்னிலையில் உள்ளது. ஜியோ அறிமுகத்திற்குப் பின் இனி இந்தியாவில் 3 நிறுவனங்களுக்கு மட்டுமே வாய்ப்பு என ஆய்வுகள் கூறும் நிலையில் டெலிகாம் டவர் வர்த்தகத்தில் ஈடுபட்டு இருக்கும் நிறுவனங்கள் மத்தியில் மாற்றம் ஏற்படப் போகிறது என இத்துறை வல்லுனர்கள் கூறுகின்றனர்.

டெலிகாம் சேவை மற்றும் டவர் வர்த்தகம்

டெலிகாம் சேவை மற்றும் டவர் வர்த்தகம்

இந்தியாவில் டெலிகாம் சேவைகளை வாடிக்கையாளர்களிடம் கொண்டு சேர்க்கும் டெலிகாம் டவர்கள் அமைக்கவும், அதனைப் பராமரிக்கவும் தனியாக நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில் இத்துறையில் பெரிய அளவிலான லாபம் இருக்கும் காரணத்தால் சில வெளிநாட்டு நிறுவனங்களும் இந்தியாவில் இயங்கி வருகிறது. டெலிகாம் சேவை நிறுவனத்தில் மத்தியில் தற்போது இணைப்புகள் ஏற்பட்டு வருவதைப் போல அடுத்தச் சில நாட்களில் டவர் வர்த்தகத்தில் இருக்கும் நிறுவனங்களும் இணைக்கப்படும் எனச் சந்தை நிலவரங்கள் கூறுகிறது.

 

3 நிறுவனங்களுக்கு மட்டுமே வாய்ப்பு

3 நிறுவனங்களுக்கு மட்டுமே வாய்ப்பு

இதன் படி இந்தியாவில் பார்தி குழுமத்தின் இன்பராடெல்-இண்டஸ் டவர்ஸ், அமெரிக்கன் டவர்ல் கார்ப் மற்றும் கனடா நாட்டின் ப்ரூக்பீல்டு ஆகிய 3 நிறுவனங்களுக்கு மட்டுமே வாய்ப்புது.

அதேபோல் டெலிகாம் சேவையில் இருக்கும் நிறுவனங்களில் ஜியோ, வோடபோன்-ஐடியா, பார்தி ஏர்டெல் ஆகிய 3 நிறுவனங்கள் மட்டுமே ஆட்சி செய்யும்.

 

4.5 லட்சம் டவர்கள்

4.5 லட்சம் டவர்கள்

இந்தியாவில் மொத்தம் 4.5 லட்சம் டவர்கள் உள்ளது. இதன் எண்ணிக்கை ஒவ்வொரு வருடமும் 3-5 சதவீதம் வரை உயர்ந்து வருகிறது. இதில் இண்டஸ் டவர்ஸ் நிறுவனம் 1.23 டவர்களுடன் இத்துறையில் ஆதிக்கம் செலுத்துகிறது.

இதைத் தொடர்ந்து பார்தி இன்பராடெல் 91,000 டவர்களையும், பிஎஸ்என்எல் 65,000 டவர்களையும், அமெரிக்கன் டவர் கார்ப் 58,000 டவர்களையும், ஜடிஎல் இன்பராஸ்டக்சர்ஸ் 28,000 டவர்களையும், ரிலையன்ஸ் இன்பராடெல் 43,600 டவர்களையும், டவர் விஷன் இந்தியா 9,000 டவர்களையும், அசென்டாஸ் டெலிகாம் இன்பரா கணிசமான டவர்களையும் வைத்துள்ளது.

 

 இணைப்புக்கான காரணம்

இணைப்புக்கான காரணம்

இந்தியாவில் டெலிகாம் டவர் சேவையை அளித்து வரும் நிறுவனங்கள் வருவாய் அளிக்கும் புதிய மற்றும் மாறுப்பட்ட வழிகளைத் தேடி வரும் நிலையில், சில மாதங்களில் இத்துறையில் இருக்கும் பெரிய நிறுவனங்கள் சிறிய நிறுவனங்களை முழுமையாகக் கைப்பற்றும் எனத் தெரிகிறது.

 தொழில்நுட்ப மாற்றம்

தொழில்நுட்ப மாற்றம்

மேலும் டெலிகாம் நிறுவனங்கள் தற்போது 3ஜி சேவையை முழுமையாக நிறுத்திவிட்டு வாய்ஸ் கால்களுக்காக 2ஜி மற்றும் டேட்டா சேவைக்காக 4ஜி தொழில்நுட்பத்தை மேம்படுத்தவும் விரிவாக்கம் செய்யவும் முடிவு செய்துள்ளது.

இத்தகையைச் சூழ்நிலையில் டவர் நிறுவனங்கள் தங்களது வர்த்தக முறையை மாற்றிப் புதிய வருவாய் அளிக்கும் திட்டங்களைச் செயல்படுத்த முடிவு செய்துள்ளது. இதற்கு வலிமையாக மற்றும் அதிக எண்ணிக்கையிலான டவர்கள் இந்த நிறுவனங்களுக்குத் தேவை.

 

இணைப்பு மட்டுமே சாத்தியம்

இணைப்பு மட்டுமே சாத்தியம்

இதன் காரணமாகப் புதிய முதலீட்டுடன் புதிய டவர்களை அமைப்பது தற்போதைய வேகமான வர்த்தகச் சூழ்நிலைக்கு ஏற்றதாக இருக்காது. ஆகவே பெரிய டவர் நிறுவனங்கள் சிறிய டவர் நிறுவனங்களைக் கைப்பற்றி முழுமையாக வர்த்தகத்தை இணைத்துக்கொள்ளும் எனத் தெரிகிறது.

புதிய வரிவாக்கம்

புதிய வரிவாக்கம்

இந்நிலையில் பார்தி ஏர்டெல் நிறுவனம் சமீபத்தில் டேட்டா சேவையின் தேவை அதிகரித்துள்ள நிலையில் கூடுதலாகச் சந்தையில் 20,000 கோடி ரூபாய் முதலீட்டை அறிவித்துள்ளது. இதில் 5,000 கோடியை ஏற்கனவே சந்தையில் செலவு செய்துள்ளது.

ஜியோ அடுத்தச் சில மாதங்களின் தனது டவர் எண்ணிக்கையை 2 லட்சமாக உயர்த்த முடிவு செய்துள்ளது.

 

வங்கி மற்றும் டெலிகாம்

வங்கி மற்றும் டெலிகாம்

பொது-வாக இந்தியாவில் வாடிக்கையாளர் சந்தையில் மிகவும் வலிமையானது, இதில் ஒரு துறையில் 8-10 நிறுவனங்கள் இருந்தால் வர்த்தகச் செய்யவும் லாபத்தைப் பெறுவதும் கடினம். ஆகவே நிறுவனங்கள் எண்ணிக்கையைத் தற்போதும் இந்தியாவில் வங்கி மற்றும் டெலிகாம் துறையில் குறைந்து வருகிறது.

இது பிற துறைகளிலும் இன்னும் சில வருடங்களில் நிகழும்.

 

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+