ஜனவரி முதல் தங்க நகைகளுக்கு காரட் மதிப்புடன் ஹால்மார்க் குறியீடு கட்டாயம்!
அமேசான் நிறுனத்தின் தலைமை செயல் அதிகாரியான ஜெஃப் பெஜோஸ் அவருடனை கனவு திட்டத்தில் முதலீடு செய்வதற்காக 1.1 பில்லியன் டாலர் மதிப்பிலான அமேசான்.காம் பங்குகளை விற்றுள்ளார்.

இதனால் ஜெஃப் பெஜோஸ் அவர்களிடம் இருந்து 1.3 சதவீத பங்குகளின் அளவு குறைந்து 16.4 சதவீத பங்குகளை மாட்டும் தன்வசம் வைத்துள்ளார்.
சென்ற ஏப்ரல் மாதம் அமேசான் நிறுவனத்தின் பங்குகளை விற்று புளூ ஆரிஜின் நிறுவனத்திற்காக முதலீடு செய்ய இருப்பதாக அறிவித்து இருந்தார். அதனை தற்போது செய்து காட்டியுள்ளார்.
புளூ ஆரிஜின் எல்எல்சி நிறுவனமானது விண்வெளிக்கு மக்களை அனுப்புவதற்காக உருவாக்கப்பட்ட ராக்கெட் நிறுவனமாகும். ஏற்கனவே இந்தத் திட்டத்திற்காக மே மாதமும் மில்லியன் கணக்கு மதிப்பாலான பங்குகளை விற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications