சவுதி இளவரசர் அல்வலேத் பின் தாலால் அல் சவுத் மத்திய கிழக்கு நாடுகளின் ஃபோர்பஸ் பட்டியலில் இடம்பிடித்துள்ள பில்லியனர் ஆவார். இவரைத் தற்போது ஊழல் புகாரில் கைது செய்துள்ளது சவுதியில் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
அல்வலேத் பின் தாலால் அல் சவுத் மட்டும் இல்லாமல் 11 சவுதி இளவரசர்கள் மற்றும் 10 மந்திரிகள் இந்த ஊழல் புகாரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஊழல் எதிர்ப்புக் குழு
சவுதி மன்னர் முகமது பின் சல்மான் தலைமையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஊழல் எதிர்ப்புக் குழு சவுதி இளவரசர் அல்வலேத் பின் தாலால் அல் சவுத், 1 சவுதி இளவரசர்கள் மற்றும் 10 மந்திரிகளைக் கைது செய்துள்ளதாகச் சவுதி செயற்கைக்கோள் தொலைக்காட்சி நெட்வொர்க் அல் அரேபியா செய்தியை வெளியிட்டுள்ளது.
மறுப்பு
இது குறித்துக் கைது செய்யப்பட்டுள்ள இளவரசர் அல்வலேத் பின் தாலால் அல் சவுத் அவர்களின் நெருங்கிய வட்டாரத்திடம் கேட்டபோது பதில் அளிக்க மறுத்துவிட்டனர்.
யார் இந்த அல்வலேத் பின் தாலால் அல் சவுத்?
அல்வலேத் பின் தாலால் அல் சவுத் மென்லோ கல்லூரி மற்றும் சிராக்யூஸ் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றுள்ளார். கிங்டம் ஹோல்டிங் என்ற இவரது நிறுவனம் சவுதி பங்கு சந்தியிலும் பட்டியலிடப்பட்டுள்ளது. சிட்டி குழுமம், டிவிட்டர் மற்றும் பிற நிறுவனங்களில் பங்குகளையும் இவர் வைத்துள்ளார்.
சொத்து மதிப்பு
கிங்டம் ஹோல்டிங் நிறுவனத்தின் கீழ் பாரிஸ் நகரில் ஜார்ஜ் வ் ஹோட்டல், மன்ஹட்டன்னில் பிளாசா ஹோட்டல், மற்றும் தொலைக்காட்சி சேனல்களையும் நடத்தி வருகின்றார்.62 வயதான இவருக்குக் கிங்டம் ஹோல்டின் நிறுவனத்தில் 95 சதவீத பங்குகள் உள்ளன. இவரது மொத்த சொத்து மதிப்பு 18.7 பில்லியன் டாலரைத் தாண்டும் என்றும் ஃபோர்ப்ஸ் குறிப்பிட்டுள்ளது.
பெண் வாகன ஓட்டுனர்கள் ஆதரவு
இவரது சொத்து மதிப்புள் ஒரு பக்கம் இருந்தாலும் சவுதியில் பெண்கள் வாகனம் ஓட்டுவதற்கான சாட்டத்தினை ஆதரிப்பவர் ஆவார்.
சாலே கமால்
சவுதியைச் சேர்ந்த மற்றொரு கோடிஸ்வரரான 78 வயதான சாலே கமாலும் இந்த ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். இவரது சொத்து மதிப்பு 2.2 பில்லியன் டாலர்கள் ஆகும்.
முகமது பின் சல்மான்
சவுதி மன்னர் சல்மானின் மகன் இளவரசர் முகமது பின் சல்மானுக்கு 32 வயது, கடந்த ஜூன் மாதம் தான் மன்னர் பதவியை இவர் ஏற்றுள்ளார். முகமது பின் சல்மான் ஏற்கனவே சவுதி அரேபியாவின் பாதுகாப்புத் துறை அமைச்சராகவும் இருந்துள்ளார்.
முகமது பின் சல்மான் மன்னராகப் பதவி ஏற்றதை அடுத்து சவுதி அரேபியாவை மார்டனாக மாற்ற இருப்பதாகவும், எண்ணெய்யை மற்றும் சார்ந்து இல்லாத நாடாகச் சவுதியை மாற்ற இருப்பதாகவும் தெரிவித்தார். தற்போது வரை கைது செய்யப்பட்டுள்ளவர்கள் மீது என்ன மாதிரியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரியவில்லை.
கைது செய்யப்பட்டுள்ள பிறர் விவரங்கள்
முதித் பிப் அப்துல்லா (தேசிய காவலர் தலைவர்)
துர்க்கி பின் அப்துல்லா (ரியாத் மேயர்)
துர்கி பின் நாசர்
அல்வலேத் அல் இப்ராஹிம் (மத்திய கிழக்கு ஒளிபரப்பு கார்ப்பரேஷன் தலைவர்)
கலீத் அல் துய்யிர்ரி (அரச நீதிமன்றத்தின் தலைவர்)
அடெல் ஃபக்கீஹ் (ஜெட்டாவின் முன்னாள் மேயர்)
அம்ர் அல் தபாப் (தொழிலதிபர்)
இப்ராஹிம் அல் அசாப் (முன்னாள் நிதி மந்திரி)
பின் லேடன்
அல் தோபிஷி
சவுத் அல் தாவிஷ் (சவுதி டெலிகாம் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி)
கலீல் அல் மோல்ஹம் (சவுதியா விமான நிறுவனத்தின் முன்னாள் தலைவர்)
More From GoodReturns

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

டிரம்ப் அடித்த அந்தர் பல்டி.. ஈரான் மீதான தடை நீக்கம்.. எல்லாம் தலைகீழாக மாறுதே..!!

டிரம்ப்-ன் அந்த ஒரு வார்த்தை.. ஈரான் அரசு கடும் கோபம்.. வெளியான உச்சக்கட்ட எச்சரிக்கை..!!



Click it and Unblock the Notifications