உலகின் முன்னணி ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசான் நிறுவனத்தின் தலைவரான ஜெப் பீசோஸ் கடந்த ஒரு வாரத்தில் 1 பில்லியன் அமெரிக்க டாலருக்கும் அதிக மதிப்புடைய 10 லட்ச அமேசான் பங்குகளை விற்பனை செய்துள்ளார்.
பங்கு விற்பனை
கடந்த 6 வருடமாக ஜெப் பீசோஸ் 9 லட்சம் முதல் 10 லட்சம் வரையிலான பங்குகளை விற்பனை செய்து வருகிறார். கடந்த மே மாத கூட ஜெப் பீசோஸ் 940.7 மில்லியன் டாலர் மதிப்புள்ள பங்குகளை விற்றார்.
இருப்பு
இந்நிலையில் இவரிடம் தற்போது 80 மில்லியன் அதாவது 8 கோடி பங்குகளை வைத்துள்ளார்.
விரிவாக்கம்
அமேசான் நிறுவனம் தனது வர்த்தகத்தை ஒவ்வொரு நாட்டிலும் விரிவாக்கம் செய்து வரும் நிலையில் இந்நிறுவனத்தின் பங்குகளைத் தொடர்ந்து உயர்ந்த வண்ணமாகவே உள்ளது குறிப்பாகச் செப்டம்பர் மாதம் மட்டும் அமேசான் நிறுவன பங்குகள் சுமார் 18 சதவீதம் அளவிற்கு உயர்ந்தது.
45 சதவீத வளர்ச்சி
2017ஆம் ஆண்டில் அமேசான் நிறுவனப் பங்குகள் 45 சதவீதம் வரையில் உயர்ந்து உள்நாட்டு மற்றும் பன்னாட்டு முதலீட்டாளர்களுக்குச் சிறந்த முதலீட்டு வாய்ப்பை அளித்து வருகிறது.
பில் கேட்ஸ்
இந்நிலையில் உலகப் பணக்காரர்கள் பட்டியலில் தற்போது பில் கேட்ஸ் அவர்களை ஓரம்கட்டி 95 பில்லியன் டாலர் உடன் முதல் இடத்தைப் பிடித்துள்ளார். தற்போது பில்கேட்ஸ் அவர்களின் சொத்து மதிப்பு 88.5 பில்லியன் டாலர்.


Click it and Unblock the Notifications