பேடிஎம் பயனர்கள் அரட்டையடிக்கவும் பண பரிமாற்றங்களை நிகழ்த்தவும் ' இன்பாக்ஸ்' சேவையை அறிவித்துள்ளது. டிஜிட்டல் பண வாலெட் நிறுவனமான பேடிஎம் ஒரு புதிய தகவல் பரிமாற்ற சேவை ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.
அதில் உங்கள் நண்பர்களுடன் அரட்டை அடிக்கலாம் மற்றும் பணப் பரிமாற்றத்தை நிகழ்த்தலாம். பேடிஎம் இன்பாக்ஸ் சேவையில் தகவலைத் திரும்ப பெரும் வசதியையும் நேரடி இருப்பிட பகிர்வு அம்சங்களையும் தனது செயலியில் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளது. இந்த வசதிகள் வாட்ஸ்ஆப் செயலியும் அளிக்கின்றது.
வாட்ஸ்ஆப் யூபிஐ
சுவாரஸ்யமாக, வாட்ஸ்ஆப் இந்தியாவில் அதன் சொந்த யூபிஐ அடிப்படையிலான பரிமாற்ற சேவையைத் தொடங்க போவதாக எதிர்பார்க்கப்படுகிறது. தகவல் பரிமாற்ற சேவையானது தனிப்பட்ட உரையாடலை அனுமதிக்கிறது. மேலும் பயனர்கள் குழு அரட்டைகளை உருவாக்க முடிகிறது.
வாட்ஸ்ஆப் அம்சங்கள் கொண்ட இன்பாக்ஸ்
பயனர்கள் புகைப்படங்களையும் காணொளிகளையும் உடனடியாக அனுப்பலாம். நேரடி இருப்பிடத்தைப் பகிர்ந்து கொள்ளலாம் மற்றும் உள்ளமைக்கப்பட்ட கேமராவுடன் நிகழ்வுகளைக் கைப்பற்றலாம் மற்றும் பகிர்ந்தும் கொள்ளலாம்.
ஆண்டிராய்டு மற்றும் ஐஓஎஸ்
பேடிஎம் இன்பாக்ஸ் சேவை ஏற்கனவே ஆண்ட்ராய்டில் கிடைக்கிறது. நிறுவனம் கூடிய விரைவில் ஐஓஎஸ்ஸிலும் அறிமுகப்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளது.
கேஷ்பேக்
தகவல் பரிமாற்ற சேவை மட்டும் இல்லாமல் பேடிஎம் இன்பாக்ஸ் கேஷ்பேக் சலுகைகளும் அளிக்கின்றது. பயனர்கள் தங்கள் தருவிப்புகளின் நிலையைப் பார்வையிடவும், பரிவர்த்தனை மேம்படுத்தல்களை வழங்கவும் இது அனுமதிக்கிறது.
நுகர்வோர் தேவை பூர்த்தி
பேடிஎம்மின் மூத்த துணைத் தலைவரான தீபக் அப்போட், "பணம் செலுத்துவதோடு மட்டும் அல்லாமல் நம் பயனர்களும், வர்த்தகர்களும் ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்ள விரும்புகிறார்கள் என்பதை நாங்கள் உணர்ந்துள்ளோம்" என்றார். "இந்த நுகர்வோர் தேவையை பூர்த்தி செய்வதற்காக எங்களின் ஒரு படிநிலை பேடிஎம் இன்பாக்ஸ் சேவை ஆகும். அங்கு நீங்கள் நண்பர்களுடன் / வணிகர்களுடன் அரட்டையடிக்கலாம் மற்றும் எளிமையாகவும் பத்திரமாகவும் பணத்தை அனுப்பலாம் / பெறலாம்" என்றார்.
பேடிஎம் இன்பாக்ஸ் அரட்டை சேவையை எப்படி பயன்படுத்துவது?
புதிய பேடிஎம் இன்பாக்ஸ் அம்சத்தைப் பெற, உங்கள் ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட்போனில் செயலியின் சமீபத்திய பதிப்பை நீங்கள் பதிவிறக்கி நிறுவ வேண்டும். நீங்கள் பேடிஎம் செயலியை திறக்கும்போது, கீழே உள்ள பட்டியில் இன்பாக்ஸ் அம்சத்தைப் பார்க்கலாம்.
அம்சங்கள்
இன்பாக்ஸ் சின்னத்தை சொடுக்கி உங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் அரட்டை அடிக்க முடியும். உங்கள் பேடிஎம் கணக்கில் இணைக்கப்பட்ட தொலைப்பேசி எண்ணைப் பயன்படுத்த வேண்டும். ஒருமுறை, நீங்கள் புதிய தகவல் சின்னத்தை சொடுக்கினால், செயலியைப் பயன்படுத்தும் உங்கள் தொடர்பு பட்டியலில் உள்ள அனைத்து அலைபேசி எண்களையும் நீங்கள் பார்க்க முடியும். பேடிஎம் ஏற்கனவே இந்தியாவில் ஒரு பிரபலமான செயலி ஆகும். 200 மில்லியனுக்கும் அதிகமான பயனர்கள் தங்கள் மொபைல் சாதனங்களில் பேடிஎம் செயலியை பதிவிறக்கம் செய்துள்ளனர்.
சிக்கல்கள்
ஆரம்ப தோற்றத்தில், பேடிஎம் இன்பாக்ஸ் ஒரு சிறிய சிக்கல் கொண்ட மென்மையான சேவையாகத் தோன்றுகிறது. புதிய அரட்டை சேவையில் உள்ள உரை பெட்டி சிறியது ஆகும். நீண்ட வாக்கியத்தைத் தட்டச்சு செய்தால், ஆரம்பத்தில் எழுதப்பட்டதை நீங்கள் காண முடியாது. எனினும், இது பேடிஎம் விரைவில் தீர்க்கக்கூடிய ஒரு சிக்கலாகும். சின்னத்துக்குக் கீழே படத் தொகுப்பு, புகைப்படக்கருவி மற்றும் பண வழங்கீடு போன்ற பிற விருப்பங்களும் உள்ளன. அனுப்புநர் மற்றும் பெறுநர் இருவரும் சமீபத்திய பேடிஎம் செயலியை நிறுவ வேண்டும் என்பதைக் குறிப்பிடுவது முக்கியம்.
More From GoodReturns

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

எங்க கிட்ட பேச்சே கிடையாது..!! டிரம்ப் மூக்கை உடைக்கும் அளவுக்கு பதில் கொடுத்த ஈரான்..!

தங்கம் - வெள்ளி விலையில் கனவிலும் நினைக்காத விஷயம் நடத்திருக்கு.. 23 நாளில் நடந்த மெகா மேஜிக்..!!



Click it and Unblock the Notifications