உலகளவில் ஸ்மார்ட்போன் பயன்பாடும் விற்பனையும் நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில், இத்துறையில் இருக்கும் முன்னணி உற்பத்தியாளர்களுக்குப் போட்டி அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் ஸ்மார்ட்போன் சந்தையில் உலகளவில் மிகப்பெரிய சந்தையை வைத்திருக்கும் சாம்சங் மற்றும் ஆப்பிள் நிறுவனங்களுக்குச் சியோமி நிறுவனத்தின் வளர்ச்சி அதிர்ச்சியை அளித்துள்ளது என்ற சொல்ல வேண்டும்.
சியோமி
சீன ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான சியோமி மலிவான விலை மற்றும் சிறப்பான வடிவத்தின் மூலம் மக்கள் மத்தியில் பெரிய அளவிலான வரவேற்பு கிடைத்துள்ளது.
இதன் வாயிலாகக் கடந்த ஜூலை -செப்டம்பர் காலாண்டில் சியோமி நிறுவனத்தின் ஸ்மார்ட்போன் ஏற்றுமதி எண்ணிக்கை சுமார் 100 சதவீத வரையில் அதிகரித்து முன்னணி நிறுவனங்களுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.
100% வளர்ச்சி
2016ஆம் ஆண்டின் 3வது காலாண்டில் வெறும் 1.36 கோடி போன்களை மட்டுமே விற்பனை செய்த நிலையில், 2017ஆம் ஆண்டின் இதேகாலாண்டில் 2.76 கோடி போன்களை விற்பனை செய்து அசத்தியுள்ளது.
5வது இடம்..
இதன் மூலம் சியோமி உலகின் முன்னணி ஸ்மார்ட்போன் விற்பனை நிறுவனங்கள் பட்டியலில் 5வது இடத்தைப் பிடித்து அசத்தியுள்ளது.
இந்த இடத்தைப் பிடிக்கச் செப்டம்பர் மாதத்தில் சியோமி நடத்திய தள்ளுபடி விற்பனை பெரிய அளவில் உதவியது. இதனுடன் பல்வேறு வங்கி கூட்டணியில் கேஷ்பேக், தள்ளுபடி எனப் பல விதிமான ஆஃபர்கள் மூலம் புதிய வாடிக்கையாளர்களைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
அக்டோபர் மாதம்
செப்டம்பர் மாதத்தைப் போலவே ஆக்டோபர் மாதமும் சுமார் 1 கோடி போன்கள் விற்பனை செய்துள்ளதாகச் சியோமி நிறுவனத்தின் சிஇஓவான லெயி ஜூன் தெரிவித்தார்.
சாம்சங்
2017ஆம் ஆண்டுச் செப்டம்பர் 30 உடன் முடிவடைந்த காலாண்டில் சாம்சங் 8.33 கோடி போன்களை விற்பனை செய்துல 22.3 சந்தையைப் பெற்று முதல் இடத்தைப் பெற்றுள்ளது.
ஆப்பிள்
இதைதொடர்ந்து ஆப்பிள் நிறுவனம் 4.67 கோடி போன்களை விற்பனை செய்து 12.5 சதவீத சந்தையை வைத்துள்ளது.
ஹூவே
2017ஆம் ஆண்டின் 3வது காலாண்டில் மட்டும் 3.91 கோடி போன்களை விற்பனை செய்து 10.56 சதவீத சந்தையைத் தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. இதனுடன் ஓப்போ 3.07 கோடி போன்களை விற்பனை செய்து 8.2 சதவீத சந்தையை வைத்துள்ளது.
சியோமி
கடைசியாகச் சியோமி 5வது இடத்தில் உலகளவில்7.4 சதவீத சந்தையுடன் உறுதியாக நிற்கிறது.
ஸ்மார்ட்போன் சந்தையில் மென்பொருள் பிரிவில் அமெரிக்கா முதன்மையாக இருந்தாலும், வன்பொருள் மற்றும் அதன் விற்பனை சீன நிறுவனங்களை அடிச்சிக்க முடியாது என்பதை டாப் 5 நிறுவனங்களின் பட்டியலை பார்த்தாலே புரியும்.


Click it and Unblock the Notifications