இந்தியாவை மட்டும் அல்ல உலகையே வயப்பில் ஆழ்த்தியது பழைய 500 மற்றும் 1000 ரூபாயின் தடை. இவ்வறிவிப்பை பிரதமர் மோடி அறிவித்த ஒரு மாத காலத்திற்கு இந்திய மக்களை வாட்டிவதைத்தது. அதுமட்டும் அல்லாமல் சிறு மற்றும் குறு நிறுவனங்களில் பணப்புழக்கம் இல்லாமல் தடுமாறி நின்றதை நாம் மறந்திருக்க முடியாது.
பணமதிப்பிழப்பின் அறிவிக்கப்பட்டு 1 வருடம் முழுமையாக முடிந்தும் இதன் பாதிப்பு இன்னும் இந்திய பொருளாதாரத்தை விட்டு நீங்கவில்லை.
18 லட்சம் பேர்
பணமதிப்பிழப்பு அறிவிக்கப்பட்டு ஒரு வருடம் ஆகும் நிலையில், சுமார் 18 லட்சம் பேர், வங்கி கணக்கில் அளவிற்கு அதிகமாக/வழக்கத்திற்கும் அதிகமான பணத்தை வைப்பு செய்துள்ளனர்.
இவர்கள் அனைவரும் தற்போது வருமான வரி அமைப்பின் நேரடி கண்காணிப்பில் உள்ளனர். மேலும் இவர் வைப்பு செய்த பணத்திற்கான ஆதாரத்தையும் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.
99 சதவீதம் பணம்
பிரதமர் மோடியால் செல்லாது என அறிவிக்கப்பட்ட பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளில் 99 சதவீதம் மட்டுமே வங்கி கணக்கில் வந்துள்ளது, இது தோல்வி என நிதியமைச்சர் அருண் ஜேட்லி இன்று நடத்த ஒரு வருட பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் நிறைவு விழா நிகழ்ச்சியில் கூறினார்.
முதலீட்டுத் திட்டங்கள்
மேலும் இக்காலகட்டத்தில் மியூச்சுவல் பண்டு, இன்சூரன்ஸ், மூலதன சந்தை ஆகியவற்றின் வாயிலாகவும் பணம் வங்கிகளுக்குள் நுழைந்துள்ளது. ஆகவே கடந்த ஒரு வருடத்தில் குறிப்பாகப் பணமதிப்பிழப்புச் செய்யப்பட்ட காலத்தில் இத்திட்டங்களில் முதலீடு செய்தோரின் விபரத்தை முழுமையாகச் சேகரித்துள்ளது வருமான வரித்துறை.
வரி ஏய்ப்பு
ஒரு நாட்டின் மின்சாரப் பரிமாற்றம் அல்லாமல் பணம் (நாணயம், காகித பணம்) வயிலான பரிமாற்றங்கள் அதிகமாக இருந்தால் இது பல வரி ஏய்ப்புகளுக்கு வழிவகுக்கும்.
இந்தியாவில் பணத்தினால் செய்யப்படும் பணப் பரிமாற்றத்தின் அளவீடுகள் நாட்டின் ஜிடிபி அளவில் 12.2 சதவீதமாகும். இதனைக் குறைக்கப் பணமதிப்பிழப்பு சரியான முறையில் பயன்படுத்தப்பட்டது என அருண் ஜேட்லி தெரிவித்தார்.
முக்கிய நடவடிக்கைகள்
பணமதிப்பிழப்பின் வாயிலாக இந்சியாவில் பினாமி சொத்து, மறைமுக வரி ஆகியவற்றில் அடைப்படை மாற்றங்கள் கொண்டு வர முடிந்தது என ஜேட்லி இன்றைய கூட்டத்தில் கூறினார்.
வெற்றி
மொத்தத்தில் பணமதிப்பிழப்பால் நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் எவ்விதமான பாதிப்புமில்லை, இது வெற்றிப்பெற்ற திட்டமாகவே மத்திய அரசால் பார்க்கப்படுகிறது.
ஆனா இன்னும் ரிசர்வ் வங்கி, வங்கி அமைப்பிற்குள் வந்த பழைய 5௦௦ மற்றும் 1௦௦௦ ரூபாய் நோட்டுகளைக் கணக்கிட்டு முடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

டிரம்ப் அடித்த அந்தர் பல்டி.. ஈரான் மீதான தடை நீக்கம்.. எல்லாம் தலைகீழாக மாறுதே..!!



Click it and Unblock the Notifications